சித்த வைத்திய அகராதி 9951 – 10000 மூலிகைச் சரக்குகள்
பீதபூதிச்செடி – செம்மல்லிகைச்செடி
பீதபூரம் – கசப்புமாதளை மரம்
பீதம் – மஞ்சள்
பீதராகமம் – தாமரைநூல்
பீதரோனணி – உருத்திரோகணி
பீதரோகணிநெருஞ்சில் – மஞ்சள் நெருஞ்சிக்கொடி
பீதரோகணிநெல் – மலைநெல்
பீதர் – மஞ்சள்
பீதலம் – பித்தளை
பீதவண்ணக்காய் – கடுக்காய்
பீதனிமரம் – முன்னைமரம்
பீதைமரம் – மருதோன்றிமரம்
பீநாறிச்சங்குச் செடி – சங்கங்குப்பிச்செடி
பீநாறிப்பட்டை – பெருமரப்பட்டை
பீநாறிமரம் – பெருமரம்
பீமசாரிவேம்பு – மதகரிவேம்பு
பீரங்கொடி – பீர்க்குக்கொடி
பீரமந்தமரம் – அரசுமரம்
பீருகாரோகணி – பீதரோகணி
பீருதந்திக் கிழங்கு – தண்ணீர்விட்டான் கிழங்கு
பீர்க்கக்கொடி – பீர்க்குக்கொடி
பீர்க்கங்கொடி – வரிப்பீர்க்குக் கொடி
பீலகயமரம் – செந்தாழைமரம்
பீவேலா – கருவேலாமரம்
பீவேலிகக்கொடி – வேலிப்பருத்திக் கொடி
பீழைச்செடி – கண்ணுப்பீழைச்செடி
பீழைவச்சிரமரம் – விடப்பூலா மரம்
பீனம்பாசிக்கொடி – பாசிக் கொடி
பீனயக்கமரம் – புரசுமரம்
பீனிசப்புல் – பீனசப்புல்
பீனிசமொச்சை – பெருமொச்சை
பீனிசம்போக்கிச்செடி – தைவயலிச்செடி
பீனிகவவரை – வடநாட்டவரை
புகர் – வெள்ளி
புகர்நீபமரம் – வெண்கடம்புமரம்
புகழ்மரம் – அகத்திமரம்
புகாமோதிப்புல் – விஸ்வாமித்திரன்புல்
புகைநீர் – திராவகம்
புகைமடக்கி – வெண்காரம்
புகையிலைச்செடி – பிரமபத்திரச் செடி
புகையூபமரம் – தோணிமரம்
புக்கிகாமரம் – பிராய்மரம்
புக்குலிமரம் – வில்வமரம்
புங்குமரம் – புங்கன்மரம்
புசகப்பூடு – கீரிப்பூடு
புடகாமிகச்செடி – செந்நாயுருவிச் செடி
புடகிலாஞ்செடி – சிலந்திநாயகச்செடி
புடலங்கொடி – நெடும்புடற்கொடி
புடவிமூலக்கொடி – குறட்டைக் கொடி
புடாரமுளைச்செடி – செந்நாயுருவிச் செடி




