HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 6201 - 6250 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 6201 – 6250 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 6201 – 6250 மூலிகைச் சரக்குகள்

சிலாந்திகக்கொடி – சீந்திற்கொடி
சிலாபகக்கொட்டை – காப்பிக்கொட்டை
கிலாபியச்செடி – செந்துளசிச்செடி
சிலாபேசிக்கொடி – செப்புநெருஞ்சிக்கொடி
சிலாபேதக்கொடி – பூனைக்காலிக்கொடி
சிலாமதபாஷாணம் – உதிர பாஷாணம்
சிலாமதம் – கல்மதம்
சிலாமதீதிவரை – வெள்ளரி விதை
சிலாயுதன் – ஆமை
சிலியாக்கைக்கொடி – முடக்கத்தான் கொடி
சிலீமுகச்செடி – செந்நாயுருவிச் செடி
சிலும்பான் – சிறுசிலும்பான்
சிலேகக்கொடி – பழுபாகற்கொடி
சிலேகிகமரம் – செம்முருங்கைமரம்
சிலேகிதம் – செந்தூரம்
சிலேகிதக்காரம் – அக்கிராகாரம்
சிலேதமரம் – செம்முருங்கைமரம்
சிலேத்திமச்செடி – ஐவிரலிச்செடி
சிலை – மனோசிலை
சிலைநார் – கல்நார்
சிலைவாழைச்செடி – கல்வாழைச்செடி
சிலைவிந்து – கல்நார்
சில்லகாக்கிழங்கு – பூலாங்கிழங்கு
சில்லகிமரம் – தேற்றாமரம்
சில்லாந்தகிச்செடி – சிறுகுமிழ்ச்செடி
சில்லிக்கீரை – சிறுகீரை
சில்லிதமரம் – தேற்றாமரம்
சில்லிமாலினிச் செடி – கிலுகிலுப்பைச்செடி
சில்வாரிச்செடி – செவ்வலரிச்செடி
சிவகம் – சீரகம்
சிவகயமரம் – பன்னீர்மரம்
சிவகரந்தை – பூஜாகரந்தைச்செடி
சிவகாசகநீர் – பன்னீர்
சிவகாமி – கெளரிபாஷாணம்
சிவகாமிகச்செடி – சிவகரந்தைச்செடி
சிவதகிக்கொடி – வெள்ளரிக்கொடி
சிவதகைப்பூண்டு – எழுத்தாணிப்பூண்டு
சிவதாகமுருங்கை – முருங்கைமரம்
சிவதாகிதக்காய் – மாச்சக்காய்
சிவதாரமரம் – தேவதாரிமரம்
சிவதாரிகமரம் – பாலைமரம்
சிவதுளசி – வெண்துளசி
சிவதூகிக்குறண்டி – பாற்குறண்டிச்செடி
சிவதைவேர் – மலம்போக்கிவேர்
சிவதோதிகப்பச்சை – திருநீற்றுப்பச்சைச் செடி
சிவத்தாசிகச்செடி – செம்பருத்திச்செடி
சிவத்திருமரம் – வில்வமரம்
சிவத்திருமிக்காய் – தான்றிக்காய்
சிவந்தவேசைச்செடி – செம்பரத்தைச்செடி
சிவந்தாட்டுப்பால் – செம்மரியாட்டுப்பால்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments