சித்த வைத்திய அகராதி 6151 – 6200 மூலிகைச் சரக்குகள்
சிப்பாதிவேளைச்செடி – தைவேளைச்செடி
சிப்பிநீர் – சுத்தகங்கைநீர்
சிமட்டிக்கொடி – கொடிச்சிணுங்கி
சிமந்தாதிப்பாக்கு – பச்சைப்பாக்கு
சிமந்தாரிகச்செடி – சிறுபுள்ளடிச்செடி
சிமாகச்செடி – சுவற்று முள்ளங்கிச்செடி
சிமிக்கிமல்லிகைச்செடி – சீமைமல்லிகைச்செடி
சிமிங்கிமரம் – கடுக்காய்மரம்
சிமிட்டிச்செடி – சிறுசிமிட்டிச்செடி
சிமிட்டுக்கன்னிச்செடி – நேத்திரஞ்சிமிட்டிச்செடி
சிமிளிகச்செடி – பூளைச்செடி
சிமுடிகக்கொடி – பயிற்றங்காய்க்கொடி
சிமுட்டிகச்செடி – கீழ்காய்நெல்லிச்செடி
சிம்பகாப்பாசி – பழம்பாசி
சிம்பதைச்செடி – சிறு புள்ளடிச்செடி
சிம்பைக்கொடி – அவரைக்கொடி
சிம்மந்தாசிகவிரை – புன்னைக்கொட்டை விரை
சிம்மந்துகச்செடி – கொள்ளுக்காய்வேளைச்செடி
சியச்சினிக்கொடி – வேலிப்பருத்திக்கொடி
சியத்தாவிமரம் – பவளமல்லிகைமரம்
சியத்தினிச்செடி – தக்காளிச்செடி
சியநாயகபாஷாணம் – துத்தபாஷாணம்
சியிந்தகக்காய் – கடுக்காய்
சிரகசிதப்பூடு – பல்லிப்பூடு
சிரகசீனி – சீனிச்சருக்கரை
சிரகாதண்டை – குழலாதொண்டைக்கொடி
சிரகாதிப்பட்டை – பறங்கிப்பட்டை
சிரகாமணக்குச்செடி – ஆமணக்குச்செடி
சிரக்குழிச்செடி – நத்தைச்சூரிச் செடி
சிரத்தசக்காரைச்செடி – மதுக்காரைச்செடி
சிரத்தராக்கொட்டை – அக்ரோட்டுக்கொட்டை
சிரத்தவிக்கொடி – சருக்கரைக்குமிட்டிக்கொடி
சிரமமடக்கி – வாத மடக்கிக்கொடி
சிரமிலிமரம – சிற்றுடைமரம்
சிரிடகமரம் – வாகைமரம்
சிருங்காசிகச்செடி – இஞ்சிச்செடி
சிரேவணச்செடி – காட்டாமணக்குச்செடி
சிரோசனவேம்பு – கிவனார்வேம்பு
சிரோட்டகக்காய் – கடுக்காய்
சிரோட்டிரமரம் – தான்றிமரம்
சிரோணிகச்செடி – காட்டாமணக்குச்செடி
சிரோதிகப்பூடு – பனிதாங்கிப்பூடு
சிரோந்திதக்கொட்டை – பூந்திக்கொட்டை
சிரோந்தகமரம் – மயிர்க்கொன்னைமரம்
சிரோவிகம் – மிளகு
சிலகயக்கள்ளி – செஞ்சதுரக்கள்ளிச்செடி
சிலந்திகவரிசி – வாலுளுவையரிசி
சிலந்திநாயகச்செடி – இலைக்கள்ளிச் செடி
சிலாசத்து – கற்பூரசிலாத்து
கிலாசயச்செடி – செந்துருக்கன்செடி




