HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4961 - 4965 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4961 – 4965 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4961 – 4965 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4961. வைத்தாரே மேருகிரி
தன்னிலப்பா வண்மையுடன் பிரளயங்கள் நேர்ந்தபோது
கைத்தவமாய் அவரவர்கள்
செய்தநூலின் காசினியில் மலையோரம் பிரளயத்தில்
மெய்த்தெனவே திருப்பாலின்
கடலினோரம் மேதினியில் ஒதுங்கி மிதந்துமல்லோ
சத்தசாகரந்தனிலே
சிலதுநூல்கள் சாங்கமுடன் கலியுகத்தில் கண்டார்தாமே
விளக்கவுரை :
4962. கண்டாரே கலியுகத்து
மாண்பரெல்லாம் கருவான சாத்திரத்தைக் காணவில்லை
தொண்டுமிக வடியேனுஞ்
செய்துமல்லோ துப்புரவாய் காலாங்கி கடாட்சத்தாலே
சண்டையிட்டு குளிகையது
பெற்றுமேதான் சதுரான மேருகிரி தன்னிற்சென்று
விண்டிடவே போகரேழாயிரத்தை
விருப்பமுடன் மனதுவந்து கொண்டிட்டேனே
விளக்கவுரை :

[ads-post]
4963. கொண்டேனே போகரேழாயிரந்தான்
குருவான வகஸ்தியனார் காவியந்தான்
சண்டமாருதம்
பன்னீராயிரந்தான் சட்டமுடன் பணிநாலாயிரமுந்தானும்
பண்டான சதுர்காண்டம்
நாலாயிரந்தான் பாங்கான கருமமென்ற
காண்டந்தானும் விண்டான
பன்னீராயிரந்தானப்பா வுத்தமனே நாடி பன்னிராயிரந்தானே
விளக்கவுரை :
4964. நாடியாஞ் சுகர் பன்னீராயிரந்தான்
நலமான பூசி பன்னீராயிரந்தான்தேடியுங்காணாத
கருமகாண்டம் தெளிவான தெளிவான
சாத்திரமும் மலையிற்கண்டேன்
கோடிதனங் கொடுத்தாலுங்
கிட்டாதப்பா கொற்றவனார் தன்வந்திரி கிரந்தந்தானும்
நீடியே வேதபுராணங்களெல்லாம்
நிதியான மலைபோல பார்த்திட்டேனே
விளக்கவுரை :
4965. பார்த்தேனே சதகோடி புராணமெல்லாம் பாங்கான சித்துமுனி யாயுள்வேதம்
சேர்ந்ததொரு கோர்வையல்லோ
கோடாகோடி தேற்றமுடன் மலைதனிலே கண்டேன்யானும்
ஆர்த்துமே பிரளயத்தில்
மிதந்தநூல்கள் ஆயிரத்தில் ஒருபங்கு மாண்பர்கண்டார்
நேர்த்தியுள்ள சாத்திரங்கள்
முழுதுமேதான் நேர்மையுடன் மலைதனிலே சமாதிகாணே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments