HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 7851 - 7900 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7851 – 7900 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7851 – 7900 மூலிகைச் சரக்குகள்

திகைப்பூட்டுப்பச்சிலை – மதிமயக்கிப்பச்சிலை
திகைப்பூண்டுக்கொடி – நஞ்சுக்கொடி
திக்குச்செடி – கொடுவேலிச்செடி
திக்குதவிக்கோரை – சம்பங்கோரை
திக்குறுமரம் – புன்முருங்கைமரம்
திசாமிதமரம் – மூவிலைமுன்னைமரம்
திசைக்கருடன்கொடி – கட்டுக்கொடி
திசைநாச்செடி – கொடுவேலிச்செடி
திசைபரிக்கொட்டை – காப்பிக்கொட்டை
திசைபலமரம் – மதுக்காரைமரம்
திசைமாலிச்செடி – மூக்குறண்டிச்செடி
திடமைச்செடி – வெள்ளெருக்குச்செடி
திடமோகனச்செடி – ரோஜாப்பூச்செடி
திடவீரியக்கொடி – வட்டச்சாரணைக்கொடி
திடற்சுண்டிக்கொடி – வாற்சுண்டிக்கொடி
திட்டறுகுச்செடி – வெள்ளறுகுச்செடி
திட்டிவிதை – இலுப்பைவிதை
திண்டிக்கொடி – பசளைக்கொடி
திண்டிசாச்செடி – கிலுகிலுப்பைச்செடி
திண்டிரமரம் – அரசமரம்
திண்டிராட்சிக்கள்ளி – செஞ்சதுரக்கள்ளி
திதளகாமரம் – மாமரம்
திதிகேகயமரம் – மயிலைமரம்
தித்தகமரம் – மலைவேப்பமரம்
தித்தகமூலி – காரப்புகையிலை
தித்தகரோகணி – பீதரோகணி
தித்திசப்புடற்கொடி – பேய்ப்புடற்கொடி
தித்திசாகியமரம் – மாவுலிங்கமரம்
தித்திப்பிலந்தைமரம் – இனிப்பிலந்தைமரம்
தித்திப்புக்கொடிமாதுளை மரம் – இனிப்புக்கொடி மாதுளை மரம்
தித்திப்புக்கொடி முந்திரி – இனிப்புக்கொடி முந்திரி
தித்திப்புக்கோவைக்கொடி – இனிப்புக்கோவைக் கொடி
தித்திப்புநவ்வல் மரம் – இனிப்புநவ்வல்மரம்
தித்திப்புமாதுளை மரம் – இனிப்புமாதளை மரம்
தித்திப்பு மாமரம் – இனிப்பு மாமரம்
தித்திப்புமுந்திரிக் கொடி – இனிப்புமுந்திரிக் கொடி
தித்திப்பெலுமிச்சைமரம் – இனிப்பெலுமிச்சைமரம்
தித்திரத்தட்டை – நாணல்தட்டை
தித்திரகவரத்தை – சித்தரத்தை
தித்திருணிச்செடி – துளசிச்செடி
தித்திருப்புல் – கம்மம்புல்
தித்தீபம் – பேராத்தை
திந்திடிகமரம் – இனிப்புப் புளிமரம்
திந்திடமரம் – புளியமரம்
திந்துருணிப்பட்டை – புளியம்பட்டை
திந்துருணிமரம் – புளியமரம்
திபிசுமரம் – வேங்கைமரம்
திப்பியச்செடி – அசமகாகச்செடி
திப்பியவனிகச்செடி – சிவப்பம்மான்பச்சரிசிச் செடி
திப்பிலி – தீட்சனத்தண்டுலம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments