சித்த வைத்திய அகராதி 2701 – 2750 மூலிகைச் சரக்குகள்
கச்சூரங்காய் – கழற்சிக்காய்
கச்சூரங்கொடி – கழற்சிக்கொடி
கச்சூரங்செடி – சிறுகுறட்டைச்செடி
கச்சோதவண்டு – சுழல்வண்டு
கச்சோலம் – சாதிக்காய்த்தோடு
கஞ்சகச்செடி – சுண்டைச்செடி
கஞ்சங்கொடி – தாமரைக்கொடி
கஞ்சங்கோனிதச்செடி – ஓரிலைத்தாமரைச்செடி
கஞ்சஞ்செடி – கஞ்சாச்செடி
கஞ்சநீர் – குமரிநீர்
சஞ்சாங்கோரைச்செடி – காட்டுவெண்துளசி
கஞ்சாங்கோரைப்புல் – திரற்கோரைப்புல்
கஞ்சாசீரம் – கஞ்சாயிலை
கஞ்சாச்செடி -கோரக்கர்மூலிகை
கஞ்சாஞ்சிகசெடி – சேம்புச்செடி
கஞ்சுகமரம் – முருங்கைமரம்
கடகிகாச்செடி – பெருந்தும்பை
கடம்பச்சுவேதமரம் – வெண்கடம்புமரம்
கடம்பச்சேவிகம் – ஆயிலியமரம்
கடம்பமரம் – கடம்புமரம்
கடம்பமாகிதம் – அவலரக்கு
கடம்பரிசி – வாலுளுவையரிசி
கடம்பரோகிணி – கடுகுரோகிணி
கடம்புநெல் – கருங்குருவைநெல்
கடம்புரிமரம் – வெண்கடம்பமரம்
கடம்பூலிகச்செடி – ஆடையொட்டிச்செடி
கடலடக்கிக்கொடி – பேய்முசுட்டைக்கொடி
கடலதீதச்செடி – உமுரிச்செடி
கடலழிஞ்சில் – கடலூராஞ்சி
கடலாகினிமரம் – ஆண்பனைமரம்
கடலாடிச்செடி – நாயுருவிச்செடி
கடலாமணக்குச்செடி – உரலாமணக்கு
கடலாரகமரம் – ஆவிமரம்
கடலாரை – காட்டாரை
கடலிகச்செடி – மூக்குறட்டைச்செடி
கடலுராஞ்சி – கடலழிஞ்சில்
கடலேலகச்செடி – காரௌ;ளுச்செடி
கடலைச்செடி – பொரிகடலைச்செடி
கடல்கலக்கிக்கொடி – பேய்முசுட்டைக்கொடி
கடல்நீர் – வாருதிநீர் – சமுத்திரநீர்
கடல்மடுமரம் – கடலழிஞ்சிமரம்
கடவிமரம் – தணக்குமரம்
கடவுகாசிகச்செடி – ஆவரை
கடவுயதாரகமரம் – தேவதாரமரம்
கடவைக்கிரியச்செடி – ஆற்றுமல்லிகைச்செடி
கடவைமரம் – தணக்குமரம்
கடற்கனி – சமுத்திராப்பழம்
கடற்குருவி – கஞ்சியுப்பு
கடற்கேகிதச்செடி – ஆற்றுப்பூவரசுச்செடி
கடற்கொடிச்சிச்செடி – தும்பை




