சித்த வைத்திய அகராதி 2751 – 2800 மூலிகைச் சரக்குகள்
கடற்கெடித்தாமரை – கடற்றாமரைக்கொடி
கடற்கொடித்தூமமரம் – தணக்குமரம்
கடற்கொடுபாலிகச்செடி – ஆள்வாடைதட்டிச்செடி
கடற்கொழுப்பூண்டு – எழுத்தாணிப்பூண்டு
கடற்சோகி – சமுத்திரசோகி
கடற்பச்சை – சமுத்திராபச்சை
கடற்பாசி – வாரிதிப்பாசி
கடற்பாசிநீர் – சுத்தசலநீர்
கடற்றாமரை – பெருந்தாமரை
கடற்றாழிகக்கள்ளி – இலைக்கள்ளி
கடற்றாழை – சமுத்திராதாழை
கடற்றிலகக்கொடி – நீர்ச்சுண்டிக்கொடி
கடாநாரத்தை – பெருநாரத்தைமரம்
கடாந்திரச்செடி – நிலவிளாச்செடி
கடாரைமரம் – கடாநாரத்தை
கடாவிருட்சம் – எருமைவிருட்சம்
கடிகாலிச்செடி – பூனைக்காலிச்செடி
கடிசகாலிமரம் – இலவமரம்
கடிச்சகாச்செடி – காஞ்சொறிச்செடி
கடிச்சேபகமரம் – இலுப்பைமரம்
கடிதடத்திறைவன் – லிங்கபாஷாணம்
கடிதடம் – அல்குல்
கடிப்பதை – கடுகு
கடிப்பாங்கிகச்செடி – குப்பைமேனிச்செடி
கடியஷ்டகம் – சிற்றரத்தை
கடியரிசி – வாலுளுவையரிசி
கடியிரத்தக்கொடி – குறட்டைக்கொடி
கடிலாச்செடி – மூக்குறட்டைச்செடி
கடிவாற்கொடி – கும்மட்டிக்கொடி
கடுகச்செடி – மருக்காரைச்செடி
கடுகத்திமரம் – பேயத்திமரம்
கடுகம் – கடுகுரோகிணி
கடுகாலிக்கொடி – குன்றிமணிக்கொடி
கடுகாற்கரைக்கொடி – பேய்ச்சுரைக்கொடி
கடுகீதமரம் – உடைமரம்
கடுகுரோகிணி – வெண்கடுகுரோகி
கடுகெண்ணெய் – கடுகுத்தைலம்
கடுக்களாமரம் – எட்டிமரம்
கடுக்காய் – மஞ்சட்கடுக்காய்
கடுக்காய்ப்பழம் – பீஞ்சுகப்பழம்
கடுக்காய்ப்பிஞ்சு – கற்கடகசிங்கி
கடுக்காய்ப்பூ – அரேணுப்பூ
கடுக்காப்பூரிதம் – கடுக்காய்த்தோடு
கடுக்காய்மரம் – மஞ்சட்கடுக்காய் மரம்
கடுக்கிராந்தி – இஞ்சிக்கிழங்கு
கடுக்கைமரம் – கொன்றைமரம்
கடுங்காந்திப்பாஷாணம் – வெள்ளைப்பாஷாணம்
கடுங்காரநீர் – முட்டைநீர் – பூநீர்
கடுங்குட்டத்தாளிச்செடி – மிளகுதக்காளிச்செடி
கடுசித்தாழை – பறங்கித்தாழை




