HomeUncategorizedகடுவெளிச் சித்தர் - ஆனந்தக் களிப்பு 31 - 35 of 35 பாடல்கள்

கடுவெளிச் சித்தர் – ஆனந்தக் களிப்பு 31 – 35 of 35 பாடல்கள்

கடுவெளிச் சித்தர் – ஆனந்தக்
களிப்பு
31 – 35 of 35 பாடல்கள்
31. பத்தி யெனுமேணி நாட்டித் – தொந்த
பந்தமற்ற விடம் பார்த்ததை நீட்டிச்
சத்திய மென்றதை யீட்டி – நாளும்
தன்வச மாக்கிக்கொள் சமயங்க ளோட்டி.
விளக்கவுரை :
32. செப்பரும் பலவித மோகம் – எல்லாம்
சீயென் றொறுத்துத் திடங்கொள்
விவேகம்
ஒப்பரும் அட்டாங்க யோகம் – நன்றாய்
ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம்.
விளக்கவுரை :
33. எவ்வகை யாகநன் னீதி – அவை
எல்லா மறிந்தே யெடுத்து நீபோதி
ஒவ்வா வென்ற பலசாதி – யாவும்
ஒன்றென் றறிந்தே யுணர்ந்துற வோதி.
விளக்கவுரை :
34. கள்ள வேடம் புனையாதே – பல
கங்கையி லேயுன் கடன் நனையாதே
கொள்ளை கொள்ள நினையாதே – நட்பு
கொண்டு புரிந்துநீ கோள் முனையாதே.
விளக்கவுரை :
35. எங்கும் சுயபிர காசன் – அன்பர்
இன்ப இருதயத் திருந்திடும் வாசன்
துங்க அடியவர் தாசன் – தன்னைத்
துதுக்கிற் பதவி அருளுவான் ஈசன்.
விளக்கவுரை :
(முடிந்தது)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments