HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5531 - 5535 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5531 – 5535 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5531 – 5535 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5531. பாரேதான் சீனபதிவிட்டுமல்லோ
பாங்கான குளிகையது பூண்டுகொண்டு
நேரேதான் மலையாளங் குடகுநாடு
நேர்மையுடன் வெகுதேசஞ் சுற்றிவந்தேன்
சீரேதான் சிங்கணர் கொங்கணவர்
தாமும் சிறப்பான மராட்டியப்பரரைக்கண்டேன்
கூரேதான் கன்னடையர்
மலையாளரப்பா குறிப்பான குசலரவர் வேளாளர்தாமே
விளக்கவுரை :
5532. தாமான துலுக்கருடன்
மலுக்கர்தாமும் தகமையுள்ள வேளாள மாண்பருண்டு
கோமான குருக்களென்றும்
ராஜரென்றும் குவலயத்தில் சித்துமுனிப் புருஷரென்றும்
தேமான பலபலவாஞ் சாதிபேதம்
தேசமதில் கண்டதல்லோ லக்கோயில்லை
பூமான்கள் கற்றதொரு
தொழிலையெல்லாம் பூவுலகில் கண்டறிந்தேன் போகர்தானே
விளக்கவுரை :

[ads-post]
5533. தானான போகரிஷி முனிவர்தானும் தகமையுடன் கண்டறிந்த அதர்வனத்தை
வேனான விலாடமென்ற
நகருக்கப்பால் வேந்தருட பதிதனிலே சென்றேன்யானும்
மானான மகதேவர் காலாங்கி
நாதர்மன்னவனார் கூறியதோர் வாக்குநீதி
கோனான காலாங்கி வாக்குபோலே
தேசமென்ற விலாடநகர் சென்றிட்டேனே
விளக்கவுரை :
5534. சென்றேனே விலாடநகர்பதியிலப்பா
செம்மலுடன் மாண்பருட வதிசயங்கள்
கஉன்றான மலைபோலே கோடியுண்டு
கொற்றவர்கள் பஞ்சவரின் சேனைகண்டேன்
வென்றிடவே
மூலபலயுத்தந்தன்னில் வெகுகோடி மாண்பரெல்லாம் மடிந்தாரங்கே
அன்று திரியோதிரனார்
சேனைவர்க்கம் அவ்வனத்தில் சமாதிபதி கண்டிட்டேனே
விளக்கவுரை :
5535. கண்டேனே சமாதியது கோடாகோடி
காசினியில் யாரேனுங் கண்டதில்லை
அண்டர்முனி ராட்சதர்கள்
சமாதிவர்க்கம் அவ்வனத்தில் சுத்திவந்து காண்பரங்கே
கொண்டல்வண்ணன் அச்சுதனார்
போர்கள்செய்த கோடான கோடிவகை யாயுதங்கள்
பண்டுளவு மாலையணி பூண்டமாது
பாங்கான கோயில்தனில் பார்த்திட்டேனே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments