HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5516 - 5520 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5516 – 5520 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5516 – 5520 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5516. ஆட்டவே நாற்சாமமானபின்பு
வப்பனே குளிகையது செய்வாயப்பா
தேட்டமுடன் பயரளவாய்க்
குளிகைசெய்து செம்மலுடன் நிழல்தனில் தானுலர்த்தி
நீட்டமுடன் பஞ்சாட்சர
வுருவுதானும் நீதியுடன் லட்சமது போட்டபின்பு
வாட்டமுடன் பரணிதனில்
அடைத்துக்கொண்டு வளம்பெறவே தானெடுத்து வளமைகேளே
விளக்கவுரை :
5517. கேளப்பா மங்கையரைக் கண்டபோது கெவனமுடன் அவர்மனதும் உன்மனதுமானால்
பாளப்பா போகாமல் எந்தநாளும்
பட்சமுடன் உன்மீதில் மனம்லயித்து
ஆளப்பா சொல்லுகிறேன்
குளிகைதன்னை வப்பனே யறுசுவையாம் பதார்த்தந்தன்னில்
மீளப்பா போகாமல்
தாம்பூலத்தில் மிகபடவே பாலதனில் கொடுத்திடாயே
விளக்கவுரை :

[ads-post]
5518. கொடுக்கவே மங்கையரும்
மனதுவந்து குவலயத்தில் எந்நாளும் உந்தன்மீது
அடுக்கவே மற்றொருவர்
தன்னைக்கண்டால் வப்பனே சத்தருவாய் மனதிலெண்ணி
ஒக்கமுடன் உன்பக்கல்
சதாகாலந்தான் உத்தமனே பட்சமது கருணைகூர்ந்து
நடுக்கமுடன் ஏவலுக்கு
முன்னேநின்று நாள்தோறும் கருணையது புரிவான்தானே
விளக்கவுரை :
5519. தானான யின்னமொரு
மார்க்கங்கேளு தயவான புலிப்பாணி மைந்தாபாரு
கோனான சித்தர்களும்
முனிவர்தேவர் குவலயத்தில் கோடிவித்தை வினோதஞ்செய்தார்
தேனான மனோன்மணியாள்
கடாட்சத்தாலே தெளிவான வித்தையெல்லாம் மறைத்துப்
போட்டார்
மானான வித்தையிது
மாந்திரீகவித்தை மன்னவனே கண்மணியே சொல்வேன்பாரே
விளக்கவுரை :
5520. சொல்லவே காலாங்கி
தாள்பணிந்து சுத்தமுள்ள எந்தனுக்கு உகந்தசீஷா
வெல்லவே வையகத்தில்
மாண்பர்தாமும் விருப்பமுடன் இதிகாச வித்தையெல்லாம்
புல்லவே யுந்தனிட
மறிந்துகொண்டு புகழான குருவென்று மனதிலெண்ணார்
அல்லல்படும் துயரமது
மிகவாய்ச் செய்து வப்பனே துரோகமது செய்வார்பாரே 
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments