HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5071 - 5075 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5071 – 5075 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5071 – 5075 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5071. போற்றுவார் உனைநித்தம்
புண்ணியவானே பொங்கமுடன் சதாகாலம் பணிவார்பாரு
சாற்றலுடன் திரிகாலம்
பூசைசெய்வார் சதாநித்தம் யேவல்களும் மிகவேசெய்வார்
ஆற்றலுடன் சித்தனைப்போல்
நீயுமப்பா வப்பனே எப்போதும் மகிமைபூண்டு
நீற்றலுடன் சிவயோகம்
பூண்டுமல்லோ நீதியுடன் நீயிருந்துகொண்டு நிலையங்காணே
விளக்கவுரை :
5072. காணவே யின்னமொரு மார்க்கம்பாரு கருவான ஜாலமப்பா வராகஜாலம்
பூணவே கடாவொன்று வராகமொன்று
பொங்கமுடன் கொண்டல்லோ செப்பக்கேளு
தோணவே சபைகூட்டி
வேந்தர்முன்னே தோற்றமுடன் டோலியென்ற மேளமப்பா
நாணவே டோலிக்குள்
வராகன்தன்னை நாட்டமுடன் வாய்கட்டி யடைத்திடாயே
விளக்கவுரை :

[ads-post]
5073. அடைத்துமே போலிருக்கு
யிருபக்கந்தான் அடவாக வாயிறுக்கிக் கட்டிப்போடு
படைமுகம் பார்த்திருக்க
சீஷனொன்று பாலகனே மனதிற்கு உகந்தமாண்பன்
தடைகூடி சீஷனப்பா பாலகனாக
சற்பனைகள் தெரிந்தவனாய்த் தேர்ந்தெடுத்து
விடைதனக்கு உகந்தவனாய்
ஞானமோதி வித்தகனே கழுத்தினிலே டோலிமாட்டே
விளக்கவுரை :
5074. மாட்டியே
டோலிதனையடிக்கச்சொல்லி மன்னவர்கள் பார்த்திருக்க நீயுமப்பா
கூட்டமுடன் வாடதனை
சபையோர்முன்னே குறிப்பாக கத்திகொண்டு வெட்டுவாய்நீ
தேட்டமுடன் வாடதுதான்
வராகமாகும் தெளிவாக வுதிரமது பூமிநிற்கும்
நீட்டமுடன் வாடதுவும்
ரூபமாறி நிலையான வராகமது வாகும்பாரே
விளக்கவுரை :
5075. பாரென்று சொல்லியல்லோ
பாலர்மெச்ச பாரினிலே திரைகொண்டு மைந்தாநீயும்
நேரேதான் டோலிதனை
யடித்துக்கொண்டு நிஷ்களங்கமாகவல்லோ சபையோர்முன்னே
வேறேதான் வுள்ளிருக்கும்
வராகந்தன்னை விட்டல்லோ வாடதனையுள்ளேபோடு
நாரேதான் வாராலே
இருக்கிக்கட்டி நலம்பெறவே திரையதனை யவிழ்த்திடாயே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments