HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5161 - 5165 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5161 – 5165 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5161 – 5165 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5161. தானான பேய்கொண்ட மாண்பருக்கு
தாக்கான கருவொன்று சொல்வேன்பாரு
தேனான தேவிமனோன்மணியாள்பூசை
தோற்றமுடன் தானமைத்துக் கும்பம்வைத்து
கோனான குருபரணைத்
தியானம்செய்து கொப்பெனவே வுக்கோசைதனையெடுத்து
மானான மந்திரத்தை
யுச்சரித்து மார்கமுடன் பேயாட வழிசொல்வேனே
விளக்கவுரை :
5162. வழியான தேவதையைத் தானழைத்து
வளமையுடன் ஜெபதபங்கள் மிகவேவோதி
பழியான
முப்புலியுந்தான்கொடுத்து பான்மையுடன் ஓமமதுசெய்யும்போது
சுழிமாரி மயக்கமது
வதிகங்கொண்டு சுடரொளியாந் தீபமது பார்க்கும்போது
குழிபோன்ற கண்ணிரண்டும்
இருளுந்தோன்றி குப்புரவாய் லாடகவிபேசுவாரே
விளக்கவுரை :

[ads-post]
5163. பேசிய கூந்தலது வதிகமாகி
பேரான மராட்டகமும் மிகவுங்கூறி
ஆசித்துப் பூசித்துக்
கரங்குவித்து வப்பனே தேகமது நடுங்கலாகி 
நாசிதனில் சுவாசமது
மிகவேவோங்கி நடுக்கமுடன் குறட்டையது வதிகமாகி
தூசிபட மேனியது பிரண்டுமல்லோ
துள்ளியே பற்கடித்து எழும்புவாரே
விளக்கவுரை :
5164. எழும்பியே வேதாளம் ஆர்க்கரித்து
எழிலான பிடாரபலிகொண்ட பேய்போல்
தழும்புபடா மேனியது
தழும்புமாகி தற்பரனாற் சொரூபமதைக் கண்டாப்போல
தொழும்படவே தலைவிரித்து
ஆட்டங்கண்டு தோற்றமுடன் வெகுபினத்த லதிகமாகி
அழுதுமே ஆயாசத்தியக்கமாகி
வப்பனே கரங்குவித்து வாடும்பாரே
விளக்கவுரை :
5165. பாரேதான் சின்மயத்தைக் கண்டாற்போல பட்சமுடன் வுதிரமதை வாயாற்கக்கி
நேரேதான் பூசைமுகம்
தன்னைக்கண்டு நேர்மையுடன் யேர்வையது எனக்கொவ்வாது
சீரேதான் பிதுர்வனத்தை
கத்துமாண்டி சிறப்பான ஓங்காரப்பேய்தானல்லோ
கூரேதான் பூசையது மயானபூசை
கொப்பெனவே எந்தனுக்கு தருவீர்தாமே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments