HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5151 - 5155 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5151 – 5155 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5151 – 5155 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5151. தானான ஜலமதுவும்
காய்ந்தபின்பு சட்டமுடன் திருவெண்ணீர் காணலாகும்
கோனான குருபரனார் பூசைசெய்து
கொற்றவனே தேவதாஸ்தலத்தைவிட்டு
தேனான மனோன்மணியாள்
பாதங்கண்ட தேவிதனைப்பூசைசெய்த புனிதனென்பார்
பானான பரஞ்சுடராய்
மேனியெல்லாம் பாங்கான பட்டையது காணலாமே
விளக்கவுரை :
5152. காணலாம் சிவயோக மாண்பன்போல
கைலாயசித்தமுனி நீதானென்பார்
பூணவே பிர்மலபி கடந்தசித்து
புகழான கேணிதனில் இறங்குஞ்சித்து
தோணவே யெரிகாலன் தந்திரஜாலம்
தோற்றமுடன் காண்பதற்கு பிரம்மையாகும்
நீணவே ஜாலமாந்
தந்திரப்போக்கு நீதியுடன் செய்துமல்லோ பரிசுவாங்கே
விளக்கவுரை :

[ads-post]
5153. வாங்கப்பா ராஜரிடம்
பரிசுவாங்கி வளமுடனே வையகத்தில் சித்தனைப்போல
தூங்கியே திரியாதே துய்யபாலா
துரைராஜன் சுந்திரன்போல் போகஞ்செய்து
ஏங்கியே மாண்பரெல்லாம்
திடுக்கிட்டேங்க யெழிலான மாயவித்தை வெண்ணீர்வித்தை
சாங்கமுடன் செய்துமல்லோ
தரணிமீதில் சட்டமுடன் காலாங்கி தன்னைப்போற்றே
விளக்கவுரை :
5154. போற்றியே யின்னமொரு
கருமானங்கேள் புகழான காலாங்கிநாதர்தம்மால்
தேற்றமுடன் எந்தனுக்கு
உபதேசித்த தெளிவான ஜாலவித்தை மரக்காணந்தான்
ஆற்றலுடன் மணத்தவளை
நெய்யைவாங்கி வப்பனே வுடும்பினுட நெய்யுங்கூட்டி
சாற்றலுடன் விலாங்கினது
யிணமுஞ்சேர்த்து சட்டமுடன் குழித்தயிலம் வாங்கிடாயே
விளக்கவுரை :
5155.  வாங்கியே தயிலமதை யிறக்கிக்கொண்டு வண்மையுடன் சீசாவிற்
பதனம்பண்ணு
பாங்குடனே சிங்கமும்
பாண்டஞ்செய்து பதனமுடன் மேல்வாயாந் தளவாய்போல
தேங்கவே பாண்டமதில்
கரியைக்கொட்டி தேற்றமுடன் தீயதனைப் போட்டுமல்லோ
ஓங்கவே சிறுகழியாய்
விறகுதன்னை ஒப்பமுடன் போட்டுமல்லோ எரித்திடாயே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments