HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5236 - 5240 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5236 – 5240 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5236 – 5240 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5236. சித்தனா மின்னமொரு
மார்க்கஞ்சொல்வோம் சிறப்பான புலிப்பாணி மைந்தாகேளு
பக்தியுடன் குளிகையது
பூண்டுமல்லோ பார்லோகம் சத்தகடல் சுத்திவந்தேன்
முத்திபெற மாண்பரெல்லாங்
கோடிகோடி முயன்றுமே காவிகஷாயத்தோடும்
நித்தமுமே ஜெபதபங்கள்
அதிகமுண்டு நீணிலத்தில் வெகுபேர்கள் கோடியாமே
விளக்கவுரை :
5237. கோடியாம் சாதியிலே
யனந்தஞ்சாதி கொற்றவனே பதினெட்டு ஜாதியுண்டு
பேடிகளுஞ் சூரர்களு
மெத்தவுண்டு பேரான பதிதனிலே லக்கோயில்லை
தேடியே பலதேசங்
கண்டாராய்ந்தேன் தேசத்தில் சைவமது காணவில்லை 
நீடிரே வெகுமாண்பர்
தேசமெல்லாம் நிலையான சைவமென்று சொல்லுவார்பாரே
விளக்கவுரை :

[ads-post]
5238. சொல்லுவது வாக்கியத்தைக்
கேட்டதுண்டு சொற்பமுள்ள சைவர்களைக் கண்டதில்லை
பல்லவே இறைச்சிவகை
புசியோமென்றும் புலால்வகைகள் புசிப்பதில்லை யென்றுகூறி
வெல்லவே மதாச்சார பேதாபேதம் வெகுவாகப்
பினத்தியல்லோ திரிவார்பாரு
கொல்லவே நித்தியமும்
புலாலைத்தின்று கூசாமல் சைவமென்று கூறுவாரே
விளக்கவுரை :
5239. கூறுவார் பலபேத ஜாதிதன்னில்
குறிப்புடனே பிரம்மென்ற ஜாதியப்பா
மாறுதலாம் சைவத்தைக்
கூறியல்லோ மகுத்துவங்கள் ஆகமங்கள் மிகவுஞ்சொல்லி
தாறுமாறாகவல்லோ வேதங்கள்கூறி
தாரிணியில் வெகுமாண்பர் பிழைப்பாரப்பா
ஆறுதலம் கரைகண்ட யோகநிஷ்டை
வப்பனே செய்தவர்கள் மட்டிமாடே
விளக்கவுரை :
5240. மாடான மாடல்லோ மாண்பரப்பா
வையகத்தில் ஜாதிகெட்ட சைவரப்பா  
கோடான கோடிபேர் சைவமென்று
கூறியதோர் மொழியதனைக் காதிற்கேட்டேன்
தாடான மாமிஷத்தை
தின்பார்பாதி சட்டமுடன் நெய்யதனைக் குடிப்பார்பாதி
நீடான தயிர்பாலில் சைவமுண்டோ
நிட்சயமாய் சைவமென்று நம்புவாரே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments