HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5241 - 5245 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5241 – 5245 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5241 – 5245 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5241. நம்பவென்றால் சைவங்களில்லையப்பா நாதாந்த சித்துகளுஞ் சொல்லவில்லை 
வம்பென்று மறைத்துவைத்தார்
சைவந்தன்னை வளமுடனே புலால் தின்னார் எவருமில்லை
வெம்பியதோர் ரோகமென்ற
செம்மறிதானப்பா விருப்பமுடன் பொசிக்கின்றார்
சூத்திரருமப்பா
தும்பியுடன் பிரம்மகுல
ஷத்திரியர்தாமும் துகளகற்றி நெய்மோரை குடிப்பார்தாமே
விளக்கவுரை :
5242. குடிப்பாரே பால்தயிர்கள்
நெய்குடிப்பார் குற்றமென்று யிறைச்சிதனை நீக்கிவிட்டார்
நடிப்புடனே சைவமென்று
சொல்லலாமோ நாதாக்கள் கைமறைப்பாய்க் காட்டவில்லை
துடிப்புடனே மற்றதோர்
ஜாதியெல்லாம் துப்புரவாய் புலால்வகைகள் மிகவுந்தின்பார்
அடிப்படைதான் மாமிஷங்கள்
என்னலாகும் அப்பனே மேல்மிதக்கும் நெய்யுமாமே
விளக்கவுரை :

[ads-post]
5243. நெய்யான வகைகளெல்லாம்
கொஞ்சமல்ல நிட்சயமாய் சேருக்கு எட்டிலொன்று
துய்யதொரு மாமிஷங்கள்
தின்போன்சைவன் துப்புரவாய் நெய்தின்போன் சைவனல்ல
வெய்யதொரு மாமிஷத்தில்
நெய்யேயில்லை விருப்பமுடன் ரத்தமது சுண்டியல்லோ
பையவே பாலாகி வந்தநெய்தான்
பாலகனே இறைச்சிக்கு வதிகமாமே
விளக்கவுரை :
5244. அதிகமாம் காய்கறிகள்
புழுவேயுண்டு வப்பனே யெலைவகையில் புழுவுமுண்டு
கதிதமுடன் தண்ணீரிற்
புழுவுமுண்டு கண்காணாயெச்சலது மலுமுமுண்டு
துதிதமுடன் சுத்தமது
யெதிலேயுண்டு சுகமுண்டோ சைவத்திலதிகமுண்டோ
பதிதமுடன்
பொய்ச்சைவமல்லாலப்பா பாரினிலே மெய்ச்சைவ முண்டோபாரே
விளக்கவுரை :
5245. பாரப்பா யின்னம்வெகு
வினோதமப்பா பாரினிலே மாணாக்கர் செய்யுமார்க்கம்
ஆரப்பா கற்பகத்தருவின்மூலம்
வப்பனே யார்தின்ற யெச்சிலப்பா
சீரப்பா மாண்பரெல்லாம்
ஆதாரந்தான் சிறப்புடைய கிழங்கென்று பொசித்தாரப்பா
நேரப்பா பலபேரும்
பொசித்தமூலம் நினைவழிந்து நின்றுமல்லோ கெட்டார்மாண்பரே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments