HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5461 - 5465 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5461 – 5465 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5461 – 5465 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5461. நன்றான கருவதனை
வொன்றாய்கூட்டி நாயகனே பொடியதுவாய்ச் செய்துகொண்டு
குன்றான மனோன்மணித்தாய்
கிருபையாலும் கோவேந்தர் காலாங்கி கிருபையாலும்
பன்றாக சிமிழ்தனிலே
யடைத்துக்கொண்டு பாங்குபெற சின்மயத்தை மனதிலெண்ணி
வென்றிடவே பூமிதனில்
வீடமைத்து விருப்பமுடன் நவகோணங்கீறிடாயே
விளக்கவுரை :
5462. கீறவே நவகோணமென்னவென்றால்
கிருபையுடன்சொல்லுகிறேன் மைந்தாகேளு
ஆறவே கோணமதில் நின்றுகொண்டு
வப்பனே ஓங்காரம் மனதிலுண்ணி
மாறலென்ற வட்சரமாய்
யௌவும்சௌவும் மகத்தான ரீங்ரீங்ஐயுங்கிலியுமாறு
தூறலதுவாராமல் எளியபாலா
துப்புரவாய் அட்சரத்தை யோதிடாயே
விளக்கவுரை :

[ads-post]
5463. ஓதையிலே லட்சமது வுருவுபோடு
வுத்தமனே மனோன்மணியாள் நிர்த்தஞ்செய்வாள்
நீதமுடன் தரிசனங்கள்
கண்டபோது நீநினைத்த காரியங்கள் சித்தியாச்சு
சாதனைகள் செய்தாலே யெல்லாஞ்
சித்தி சட்டமுடன் வையகத்தில் மாந்திரீகனாவாய்
தோதமுடன் தாமிருந்து
வாழ்க்கைபூண்டு தோறாமல் அஷ்டசித்தி யாடுவாயே
விளக்கவுரை :
5464. ஆடவென்றால் கருவென்ன
பொடிதானப்பா வப்பனே நீநினைத்த மாதுதன்மேல்
போடவே மனதுவந்து வசியமாகி
பொங்கமுடன் பின்னேயது துடறுவாள்பார்
நீடவே தொடர்ந்ததொரு
மாதுதன்னை நீநினைத்த கலவிதனில் அனுபவித்து
சாடவே யெந்நாளும்
பட்சம்வைத்து சட்டமுடன் பாதுகொள்ள நினைப்பீர்தானே
விளக்கவுரை :
5465. தானான காலாங்கி சொன்னவாக்கு தாரிணியில் பொய்யாது மெய்யேயாகும்
கோனான கருக்கள்வித்தை
கோடிசொன்னார் குவலயத்தில் செய்வதற்கு யாராலாகும்
தேனான வித்தையது சிடிகைவேதை
செப்பினேனுந்தமக்குக் கூர்ந்துபாரு
மானான வையகத்தில்
சித்தனைப்போல் மாசற்று எந்நாளும் வாழ்குவீரே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments