HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5466 - 5470 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5466 – 5470 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5466 – 5470 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5466. வாழ்கவென்றால் இன்னமொரு
மார்க்கங்கேளு வகையான புலிப்பாணி மைந்தாபாரு
ஆழ்கடலுஞ்
சத்தசாகரமுந்தாண்டி வப்பனே காலாங்கி தாள்பணிந்து
மூழ்கியே சகலநதி தீர்த்தமாடி
மூதுலகில் குளிகைகொண்டு வந்தேன்யானும்
பாழ்நகர தேசமது வனேகமுண்டு
பார்த்தேனே வெகுகோடி வித்தைதானே
விளக்கவுரை :
5467. தானான வித்தையது கோடாகோடி
தகமையுள்ள கண்மணியே யின்னங்கேளு
கோனான யெனதையர்
காலாங்கிநாதர் கொற்றவனார் தன்பாதகிருபையாலே
பானான பட்சியது
வடைக்கலந்தான் பண்பான வாண்பட்சிகொண்டுவந்து
மானான மடமாதர் சுரோணிதந்தான்
மகத்தான வாத்மஜலங்கூடக்கூட்டே
விளக்கவுரை :

[ads-post]
5468. கூட்டியே ரெண்டையுந்தான்
பட்சிதன்னில் குறிப்புடனே வாயியிடதன்னிலூட்டி
தாட்டிகமாய்
மண்கலசந்தன்னில்வைத்து தம்மையுடன் மண்சீலையேழுஞ்செய்து
வாட்டமுடன் வாலுகையா
மேந்திரத்தில் வளமுடனே தானெரிப்பாய் ஐந்துநாளும்
தேட்டமுடன் தீயாறி
யெடுத்துப்பாரு தெளிமையுடன் தவனமென்ற பற்பமாச்சே
விளக்கவுரை :
5469. ஆச்சப்பா பற்பமது
யென்னசொல்வேன் ஆரறிவார் அடைக்கலத்தின் வசியயீடு
மூச்சடங்கிப் போனதொரு
தேகந்தானும் முனையான வீடுதன்னால் மோகமாகி
பேச்சதுவும் பேசுதற்கு
முன்னேதானும் பேரின்பந்தனைமறந்த கல்விகட்கும்
ஆச்சப்பா பற்பமதை
யனுமானத்தில் வப்பனே கொடுத்திடுக வசியமாமே 
விளக்கவுரை :
5470. வசியமா மனுபானமேதென்றாக்கால்
வளமான பாணியென்ற தண்ணீராகும்
கசிதமுள்ள தண்ணீரில்
சிடிகைதாக்க கருவான பற்பத்தால் வசியமாவார்
நிசிதமுள்ள மாதர்களும்
வசியமாகி நிலையான கலவிக்கு ஒவ்யலாகி
முசிதமுடன் எந்நாளும்
உந்தன்பக்கல் மோகித்து உனையனைந்து வணங்குவாரே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments