சித்த வைத்திய அகராதி 12301 – 12350 மூலிகைச் சரக்குகள்
வன்னிவிருட்சம் – சுடர்விருட்சம்
வாகவிக்கீரை – செங்கீரை
வாகனாசிப்பயறு – பனிப்பயற
வாகினிமரம் – பாதிரிமரம்
வாகினிமுந்திரி – கொடிமுந்திரி
வாகுசக்கீரை – குப்பைக்கீரை
வாகுனிக்காரை – பெருங்காரை மரம்
வாகுனிச்செடி – கீழ்காய்நெல்லி
வாகைச்செடி – நிலவாகைச்செடி
வாகைமரம் – பெருவாகைமரம்
வாகைமேற்புல்லுருவி – வாகுமேற்புல்லுருவி
வாசந்திக்கொடி – குருக்கத்திக்கொடி
வாசந்திரமல்லி – கொத்தமல்லிச்செடி
வாசப்பச்சை – மாசிப்பச்சை
வாசவுப்பு – கல்லுப்பு
வாசனைப்புல் – தரகம்புல்
வாசனைப்பூலிகம் – சந்தன அத்தர்
வாசனைமரம் – சந்தனமரம்
வாசனைமருவி – புனுகு, புழுகு
வாசனைமல்லிகை – சாதி மல்லிகைச்செடி
வாசனையலரி – கஸ்தூர்யரளிச்செடி
வாசனைவெற்றிலை – கற்பூர வெற்றிலை
வாசனைவேதிகம் – கிராம்பு
வாசனைவேர் – விலாமிச்சைவேர்
வாசாங்கச் சாரணை – மூக்கரைச்சாரணைக் கொடி
வாசாங்கியம் – மிளக
வாசாணிமூலி – செவ்வாமணக்குச்செடி
வாசாதிச்செடி – ஆடாதோடைச்செடி
வாசித்தண்டு – ஆண்குறி
வாசிநீர் – ஆகாயநீர்
வாசுகி – நாகம்
வாடாப்பூ – தென்னம்பூ, கொய்யாதபூ, பனம்பூ
வாடாமல்லிகை – சிவப்புவாடா மல்லிகைச்செடி
வாணகத்திமரம் – அரசமரம்
வாணிமலர் – வெண்டாமரைமலர்
வாதகிச்செடி – ஆடாதோடைச்செடி
வாதசிரோமண் – நவச்சாரம்
வாதநாசனி – கொடிக்கள்ளி
வாதபோதமரம் – பலாசுமரம்
வாதமக்கிச்செடி – மேகசஞ்சீவிச்செடி
வாதமடக்கி – தழுதாழை
வாதமண்டிகச்செடி – வாதமடக்கிச்செடி
வாதமரம் – வில்வமரம்
வாதமையுப்பு – கரியுப்பு
வாதரக்காட்சி – அம்பலக்காட்சிமரம்
வாதரங்கம் – தேன்
வாதரங்கிகமரம் – அரசமரம்
வாதiவரிச்செடி – ஆமணக்குச்செடி
வாதாங்கொட்டை மரம் – வாதுமைமரம்
வாதாசணிப்பூடு – கீரிப்பூடு




