சித்த வைத்திய அகராதி 351 – 400 மூலிகைச் சரக்குகள்
அத்தம் – தங்கம், பொன்
அத்தர் – சந்தன அத்தர்
அத்தான்கொடி – முடக்கத்தான் கொடி
அத்திகடியம் – திப்பிலி
அத்திகண்ணிச்செடி — கரிசிலாங்கண்ணிச் செடி
அத்திகேசரக்கொடி – சிவப்பு வல்லிக் கொடி
அத்திகோலமரம் – அழிஞ்சில்
அத்திகோவிகக்கீரை – சிவப்பொலிச் செவிக்கீரை
அத்திக்காளிக் கீரை – கோளிக்குறும்பான் கீரை
அத்திக்காற்சுவடி – யானைக் காற்பூடு
அத்திக்குட்டிமலம் – கண்டில் வெண்ணெய்
அத்திக்கொடி – குருக்கத்தி
அத்திக்கொம்பனதிவிடையம் – யானைக்கொம்பனதிவிடையம்
அத்திக்கோலிகச்செடி – சிறுகுறிஞ்சாச்செடி
அத்திகச்செடி – நீர்முள்ளிச்செடி
அத்திசாக்கொடி – கொடிமுந்திரி
அத்தித்திப்பிலி – யானைத் திப்பிலி
அத்தித்தேக்கிச்செடி – சிறுகொத்தவரைச் செடி
அத்திபுரசாதனிச்செடி – அவுரிச்செடி
அத்திபைரவிமரம் – சீனம் விளாமரம்
அத்திமரம் – காட்டத்திமரம்
அத்திமானச்செடி – ஆமணக்கு
அத்திமேற் புல்லுருவி – குஞ்சாமேற் புல்லுருவி
அத்திரம் – குக்கில்
அத்திராமரம் – அரசுமரம்
அத்திரிகாச்செடி – சிறு சிமிட்டி
அத்திருமரம் – வேந்தன்மரம்
அத்துகச்செடி – ஆமணக்கு
அத்துகமானிமரம் – மன்னன்மரம்
அத்துகமேதிச்செடி – சிறுசிலும்பான்செடி
அத்துகாமணக்குச் செடி – ஆமணக்குச்செடி
அத்துகோசகம் – சிறுசீரகம்
அத்துசம் – மரமஞ்சள்
அத்துமணிமரம் – அரசமரம்
அத்துமம் – அரத்தை
அத்துமாகச்செடி – சிறு செந்தொட்டிச்செடி
அத்துலிக்கொடி – சிறு தெல்லுக்கொடி
அத்துவர்க்கயம் – மைச்சீரகம்
அநங்கலிச்செடி – சிறு தேட்கொ டுக்குச்செடி
அநங்கன்பூ – இருவாட்சிப்பூ
அநுசூதைமரம் – புளியமரம்
அந்தகச்செடி – ஆமணக்குச்செடி
அந்தகாரமரம் – நெல்லிமரம்
அந்தகோரமரம் – நெலலிமரம்
அந்தசடம் – வயிறு
அந்தரத்தாமரை – குளிர்தாமரை
அந்தரத்தேசரிக் கொடி – சிறுபசளைக் கொடி
அந்தரவல்லிக்கிழங்கு – கருடன் கிழங்கு
அந்தரவறுனிக்கொடி – சிறு நெருஞ்சிற்கொடி
அந்தரவனசப்பாசி – கொடிப்பாசி




