HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 401 - 450 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 401 – 450 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 401 – 450 மூலிகைச் சரக்குகள்

அந்தாரப்பனை – தொட்டிப்பனை,  சிறுபனை         
அந்திப்பீழைச்செடி – சிறு பீழை       
அந்திப்பூச்செடி – அந்திமல்லிகைப் பூச்செடி                  
அந்திமந்தாரைச்செடி – அந்திமல்லிகைச் செடி        
அந்திமரித்தான் கொடி – சிறுபேய்க் குமட்டிக்கொடி       
அந்திமலர்ந்தான் செடி – அந்திப் பூச்செடி       
அந்திமலாகிகச்செடி – அந்தி மந்தாரைச் செடி        
அந்திமல்லிகைச்செடி – அந்தி மந்தாரைச் செடி       
அந்திரலோகிதக்கொடி – சிறுபொடுதலைக் கொடி        
அந்திவிருட்சம் – தில்லைவிருட்சம்          
அந்திவீருகச்செடி – சிறுமுள்ளங்கிச் செடி
அந்தேசாலகமரம் – தேற்றாமரம்             
அப்பைமரம் – கொன்றை
அந்தேசோவிகப்பூண்டு – சிறுவெழுத்தாணிப்பூடு
அந்தோர்மரம் – நெல்லிமரம்
அபசகச்செடி – சிற்றிலந்தை
அபந்தலப்பட்டை – செங்கத்தாரிப்பட்டை
அபமார்க்கச்செடி – நாயுருவி
அபானநீர் – குடத்துநீர்
அபானியக்காய் – கடுக்காய்
அபிரங்கிமரம் – கருநெல்லிமரம்
அபிற்சாந்துப்பட்டை – பூஞ்சாந்துப்பட்டை
அபிற்சீரமரம் – சிற்றீஞ்சுமரம்
அபின் – அபினி
அப்பகச்செடி – வட்டத்திருப்பி
அப்பகாசச் சேம்புச்செடி – சீமைச்சேம்புச்செடி
அப்ரப்பட்டை – ஆவரம்பட்டை
அப்பளாகாரம் – சவுக்காரம்
அப்பாகவரிசி – வாலுளுவையரிசி
அப்பிரகநீர் – அவுரிநீர்
அப்பிரகம் – வியோசத்திபாஷாணம்
அப்பிரியமரம் – ஓதியமரம்
அப்பிருதிப்பழம் – பேரீச்சம்பழம்
அப்பீரகமரம் – புளிப்புமாமரம்
அப்பீராப்பழம் – சீமையத்திப்பழம்
அப்பு – தண்ணீர்
அப்புத்திரட்டிக்கொடி – கட்டுக்கொடி
அப்புநீறு – கடலுப்பு
அப்புப்பு – கஞ்சியுப்பு
அப்புராமரம் – பாகிரிமரம்
அப்புலொகிதம் – சீமையிலந்தை
அப்புளண்டம் – தகரைச்செடி
அப்புளாகாசக்கொடி – வேரில்லாக்கொத்தான்கொடி
அப்பைக்கோவை – கற்கோவை
அப்பைச்சேவகச்செடி – சீமையாமணக்குச்செடி
அப்பைமரம் – கொன்றைமரம்
அப்பைமாரிகச்செடி – செங்கத்திரிச்செடி                   
அப்ரேகபாஷாணம் – வியோசத்தி பாஷாணம்         
அமண்டலச்செடி – ஆமணக்கு         
அமண்டலாதிமரம் – செங்கடம்பு

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments