சித்த வைத்திய அகராதி 2401 – 2450 மூலிகைச் சரக்குகள்
எருமுட்டைக்பீநாறிச்செடி – வெதுப்படக்கிச்செடி
எருமுன்னைமரம் – பெருமுன்னை
எருமைகனைச்சான்மரம் – சுனையெருமைவிருட்சம்
எருமைக்கத்திரிp – பெருங்கத்திரி
எருமைக்கற்றாழை – கருங்கற்றாழை
எருமைக்காசிகச்செடி – முள்ளிக்கீரைச்செடி
எருமைக்காஞ்சொறிச்செடி – பெருஞ்செந்தொட்டிச்செடி
எருமைக்கொத்தான்கொடி – கொற்றான்கொடி
எருமைநாக்கிமூலி – மேகநாதமூலி
எருமைநாக்குப்புல் – கோரை
எருமைப்பாணிதம் – எருமைவெண்ணெய்
எருமைப்பால் – மேதிப்பால்
எருமைமுன்னைமரம் – பெருமுன்னைமரம்
எருவைக்கிழங்கு – கோரை
எருவைக்கோரை – சம்பங்கோரை
எருவைப்புல் – கோரைப்புல்
எரோகப்பாக்கு – களிப்பாக்கு
எர்க்கட்டரிசி – சீமைமூலிகை அரிசி
எலாக்கொட்டிக்கிழங்கு – கண்மாய்க்கொட்டிக் கிழங்கு
எலிகொல்லிப்பாஷாணம் – எலிப்பற்பாஷாணம்
எலிச்சீரகம் – பெருஞ்சீரகம்
எலிச்செவிக்கீரை – பாபலிக்கீரை
எலித்தாம்புகச்செடி – முள்ளிக்கத்திரிச்செடி
எலித்துரமமரம் – தான்றிமரம்
எலித்துளசி – குளிமீட்டான்பூண்டு
எலிபாகச்செடி – காட்டாமணக்கு
எலிபீகமரம் – கள்ளிமரம்
எலியாமணக்குச்செடி – வெள்ளையாதளைச்செடி
எலியாரிகக்கோரை – கற்கோரை
எலியால்செடி – காட்டாதளை
எலியொட்டிகம் – கற்சூரஞ்செடி
எலியோட்டிச்செடி – ஒட்டொட்டிச்செடி
எலியோட்டிக்சோபிச்செடி – காயாங்குலைச்செடி
எலியோட்டிப்பூண்டு – பிரவொட்டிப்பூண்டு
எலுமாசிகச்செடி – வேர்க்கடலை
எலுமிச்சைமரம் – இராசகனிமரம்
எலும்பு – வெள்ளெலும்பு
எலும்புச்சங்கமரம் – தில்லைவிருட்சம்
எல்லம் – இஞ்சிக்கிழங்கு
எல்லிநாதகிச்செடி – சந்திரகாந்தி
எழுகு – எகுவு – உருக்கு
எழுச்சிக்கொடி – கட்டுக்கொடி
எழுத்தாணிப்பூண்டுச்செடி – வரையாதனிப்பூண்டுச் செடி
எழுத்தாதகச்செடி – அரளி
எழுத்தாதித்தகடு – அயத்தகடு
எழுநாகச்செடி – இரணநாயகம்
எழுநாச்செடி – கொடுவேலிச்செடி
எழுநீரலரிச்செடி – அடுக்கலரி
எழுமுள்மரம் – மூட்தடிமரம்
எழுவாகைமரம் – பெருவாகை




