சித்த வைத்திய அகராதி 2351 – 2400 மூலிகைச் சரக்குகள்
ஊழலாத்திமரம் – உழலாத்திமரம்
ஊழிக்காரன் – ரசம்
ஊறுகாய் – உப்புக்காய் , உணவுகாய்
ஊற்றருகி – நீர், தண்ணீர்
ஊனாங்கொடி – முடிப்புக்கொடி
ஊனாம்பதிச்செடி – கல்விருசு
ஊனாம்பற்பூ – ஊதா அல்லிப்பூ
ஊனாம்பற்கொடி – ஊதாம்பல்
ஊனோp – கற்பம்
ஊன்றுகாற்செடி – கழுதைத்தும்பைச்செடி
எகினத்திலை – புளியயிலை
எகினமரம் – புளிமாமரம்
எகினமாதிதக்கொடி – கழுதைக்குளம்படிக்கொடி
எகின்மரம் – அழிஞ்சில்மரம்
எகுகாத்தும்மைச்செடி – கழுதைத்தும்மைச்செடி
எகுன்றுக்கொடி – குன்றிமணி
எக்கியகுமாரிமரம் – செம்மரம்
எக்கியத்தாடு – வெள்ளாடு
எச்சினிமாதம் – ஏழாமாதம்
எட்டிக்கொடி – சீந்திற்கொடி
எட்டிமரம் – விஷமுட்டிமரம்
எட்டுதானிகமுத்து – நீர்வெட்டிமுத்து
எண்களப்பூடு – வெங்காயப்பூடு
எண்கேதனச்செடி – நிலம்புரண்டி
எண்ணெய்க்கோவை – கருங்கோவை
எண்ணெய்சொக்கிப்பூண்டு – கோனியப்பூண்டு
எண்ணெய்முறியிலைச்செடி – சதாப்பிலைச்செடி
எதகமூலம் – திப்பிலிமூலம்
எதாளரிமரம் – புளியமரம்
எதிர்ப்பாஞ்சான் – மீன்
எமநாகச்செடி – அசமதாகச்செடி
எமநாகச்செடி – ஓமவல்லிச்செடி
எமநாபிச்செடி – ஊமத்தைச்செடி
எமபதிமரம் – குங்கிலியமரம்
எம்புகச்செடி – நிலக்கடம்பு
எம்மாலிகச்செடி – வெள்ளுமத்தைச்செடி
எரிகாலன்செடி – வெள்ளையாதளை
எரிகுஞ்சிப்பூண்டு – மயிர்ச்சிகைப்பூண்டு
எரிசாலைச்செடி – நீர்மேல்நெருpப்பு
எரிசூதகப்பூடு – அமலைப்பூண்டு
எரிப்புத்திட்டம் – தீபாக்கினி, கமலாக்கினி, காடாக்கினி
எரிமுகிக்கொட்டை – சேங்கொட்டை
எரிமுட்டைப்பீநாறிச்செடி – பீநாறிச்சங்கஞ்செடி
எருக்கஞ்செடி – எருக்கிலைச்செடி
எருக்கத்திக்கொடி – குருக்கத்தி
எருக்கிலைச்செடி – அருக்கன்செடி
எருதுகன்னிமரம் – பசுமுன்னை
எருந்திச்செடி – பேராமுட்டி
எருந்தூகச்செடி – நிலவூமத்தை
எருமணிக்கொடி – செங்குவளை
எருமாகிதக்கீரை – காசினிக்கீரை




