HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 736 - 740 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 736 – 740 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 736 – 740 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

736. ஏற்றியே
வானுகையின்மேலேவைத்து இதமாகத் தீயெரித்து பனிரண்டுசாமம்
போற்றியே யாறவிட்டு
எடுத்துக்கொட்டி புகழாகத்திராவகத்தில் அரைத்துலர்த்தி
தூற்றிய கொடிபோலே
குப்பிக்கிட்டுச் சகமான வானுகையின்மேலேவைத்து
பாற்றியே பனிரண்டு
சாமந்தானும் பக்குவமாய் தீயெரித்து ஆறவிட்டுவாங்கே
விளக்கவுரை :
737. வாங்கியெல்லாம் முன்போலே
அரைத்தெடுத்து வரிசையாய் ஐந்துமுறைதீர்ந்துயேறு
தாங்கியே செந்தூரம்
அருணன்போலே தலத்திலே இருக்குமப்பா இதனின்வேதை
ஓங்கியே கோடிக்கு ஒன்றுஓடும்
உத்தமனே கதலியுட பழத்தைவாங்கி
தேங்கியே பணவிடைதான்
உள்ளேகொள்ள சிவசிவாசூரியன்போல்தேகமாச்சே
விளக்கவுரை :

[ads-post]
738. ஆச்சப்பா திராவகத்தில்
அனந்தம் வித்தை ஆராய்ந்து ஒவ்வொன்றாய்ப் பார்த்துத்தேறு
ஏச்சப்பா கட்டினமோ
உருக்கினமோ கோடியெடுத்தோடும் குளிகைமுதல் செந்தூரங்கோடி
வாச்சப்பா சுன்னமுதல்
களங்குகோடி வழங்கியதோர் குருக்கோடி மெழுகுகோடி 
பாச்சப்பா ஒவ்வொன்றில் வேதைகோடி
பரிட்சிக்க தூமமுதலெட்டுமாமே
விளக்கவுரை :
துரிசி திராவகம்
739. ஆமென்ற துரிசியுட
திராவகத்தைச் சொல்வேன் அப்பனே துரிசியொரு பலந்தான் நூறு
காமென்ற வெடியுப்பு பலந்தான்
நூறு கலங்காத சீனமது பலந்தான் நூறு
வேமென்ற சவுட்டுவுப்பு
பலமுமைந்து வெகுளாலே வளையலுப்பு பலமுமைந்து
தாமென்ற கெந்தியுப்பு
பலமுமைந்து தயங்காதே இந்துப்பு பலமுமைந்தே  
விளக்கவுரை :
740. அஞ்சோடு சத்தியென்ற
காரம்பத்து அப்பனே கல்லுப்பு பலமும்பத்து
நஞ்சோடு வீரமது பலமும்
மூன்று நவாச்சாரமும் பத்துபலம்போடு
பிஞ்சோடு கருவங்கம்
பலமுமூன்று பேசாதே வாதனையுப்பு உருவியுப்பு
பஞ்சோடு மணியுப்பு
மேனியுப்பு பதறாதே ஒவ்வொன்றும் பலமும்போடே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments