சித்த வைத்திய அகராதி 10851 – 10900 மூலிகைச் சரக்குகள்
மஞ்சட்சேவிதச்சோளம் – சீதகச்சோளம்
மஞ்சட்தாரைமரம் – மந்தாரை மரம்
மஞ்சட்தாழை – பொன்தாழை மரம்
மஞ்சட்தினை – தினை
மஞ்சட்தெங்குநீர் – கௌளிபாத்திரத் தென்னையிளநீர்
மஞ்சட்தென்னை – நக்குவாரித் தென்னை
மஞ்சட்தேமாமரம் – ஒட்டுமாமரம்
மஞ்சணத்திமரம் – நுணாமரம்
மஞ்சணாதிச்செடி – மகாமேதைச்செடி
மஞ்சணிக்கொடி – வேலிப்பருத்திக்கொடி
மஞ்சதிச்செடி – கையான்தகரைச் செடி
மஞ்சரக்கள்ளி – இலைக்கள்ளி
மஞ்சராக்காளிச் செடி – மணத்தக்காளிச்செடி
மஞ்சரிச்செடி – நாயுருவிச்செடி
மஞ்சலிப்பச்சை – உருத்திரசடைச்செடி
மஞ்சளந்தி மல்லிகை – பொன்னந்திமல்லிகை
மஞ்சளாரளிமரம் – மலையாளிமரம்
மஞ்சளலரி – பொன்னலரி மரம்
மஞ்சளாவரை – ஆவரைச் செடி
மஞ்சளாவாரை – ஆவரஞ்செடி
மஞ்சளிளநீர்த்தென்னை – நக்குவாரித் தென்னை
மஞ்சளிளவஞ்சிமரம் – மயில்வஞ்சிமரம்
மஞ்சள் – விரலிமஞ்சள்
மஞ்சள்வீரிக்கீரை – மணலிக்கீரை
மஞ்சள்வெற்றிலை – பொன்னிறவெற்றிலை
மஞ்சனிக்கொடி – வேலிப்பருத்திக் கொடி
மஞ்சாரிக்கோரை – கஞ்சாங்கோரை
மஞ்சாரூகமரம் – நுணாமரம்
மஞ்சிகக்கொடி – காளிக்கொடி
மஞ்சிகவரிசி – பச்சரிசி
மஞ்சிநாக்கொன்னை – மயிற்கொன்னைமரம்
மஞ்சிகைச்செடி – கையாந்தகரைச் செடி
மஞ்சிஷ்டி – மருஞ்சிட்டம்
மஞ்சிடாலிகமரம் – மலைநொச்சிமரம்
மஞ்சிட்டம் – மஞ்சிஷ்டி
மஞ்சிபலைமரம் – வாழைமரம்
மஞ்சிறாச்செடி – கையாந்தகரைச்செடி
மஞ்சினிக்கிழங்கு – புளிநறளைக்கிழங்கு
மஞ்சினியரிசி – புழங்கலரிசி
மஞ்சூரஞ்செடி – கருஞ்சூரஞ்செடி
மஞ்சையீர்க்கு – மயிலிறகு
மடல்திருப்பிச்செடி – வட்டத்திருப்பிச்செடி
மடல்நோக்கிச் செடி – நோக்குநோக்கிச்செடி
மடவரக்குறிஞ்சி – வாடாக்குறிஞ்சிச்செடி
மடவைமயக்கிச்செடி – கன்னிமயக்கிச் செடி
மடவைமரம் – தணக்குமரம்
மடற்பனை – கங்குப்பனைமரம்
மடிகமரம் – தாழைமரம்
மடிக்கதமரம் – மலைப்பூவரசுமரம்
மடையன் – துருசு, துத்தம்




