சித்த வைத்திய அகராதி 10901 – 10950 மூலிகைச் சரக்குகள்
மடையன்நீர் – சுத்தகங்கைநீர்
மட்டம் – நாலுமாற்றுப் பொன்
மட்டிகேயமரம் – விளாத்திமரம்
மட்டிச்சாம்பிராணி – வகுளிச்சாம்பிராணி
மட்டித்தேயமரம் – வெண்கருங்காலிமரம்
மட்டிப்பால – வாசனைப்பால்
மட்டுகாத்தண்டு – வெண்கீரைத்தண்டுச் செடி
மணக்கேரலமரம் – வாழைமரம்
மணங்குச்செடி – இருவாட்சிச் செடி
மணத்தக்காளி – மணித்தக்காளிச்செடி
மணமாலிக் கொழுந்து – மரிக்கொழுந்து
மணலிக்கீரை – அயினிக்கீரை
மணலிக்கோரை – உப்பங்கோரைப்புல்
மணலிச்சசெடி – மருக்கொழுந்துச்செடி
மணல்நீர் – கங்கைநீர்
மணற்சீனி – அஷ்டகிராம்சீனி
மணிக்காம்புச்செடி – தக்காளிச்செடி
மணிக்கொடி – உத்தரமணிக்கொடி, நஞ்சுக்கொடி
மணிச்சித்திரச்செடி – பொற்றலைக் கரிப்பான்செடி
மணிப்பிரண்டைச்செடி – கரணைப்பிரண்டைச்செடி
மணிப்புங்குமரம் – நெய்க்கொட்டான்மரம்
மணிமாமரப்பழம் – மாம்பழம்
மணிமுத்துவேங்கை – வச்சிரவேங்கைமரம்
மணிமூலிக்கொடி – உத்தாமணிக்கொடி
மணியாட்டங்கொடி – வனமிரட்டிக்கொடி
மணியாத்தி – காட்டாத்திமரம்
மணியாமணக்குச்செடி – ஆமணக்குச்செடி
மணிலாக்கடலை – வேர்க்கடலை
மணிவீசிரமரம் – மாதளைமரம்
மணீசகச்செடி – சந்திரகாந்தி
மண்சாடிக்குண்டுமணி – பெருங்குண்டுமணி
மண்சிலை – மருந்துமேற்கவஞ்செய்யும் மண்துணி
மண்டகிச்செடி – ஆமணக்குச்செடி
மண்டலம் – நாற்பத்தெட்டுநாள்
மண்டலாட்டிரச்செடி – காட்டிலுப்பைச்செடி
மண்டலாதிகக்காய் – மாங்காய்
மண்டலிச்செடி – அழுகண்ணிச்செடி
மண்டிதக்கீரை – சிறுகீரை
மண்ணரசுமரம் – பூவரசுமரம்
மண்ணிலவேந்தனிலை – வெற்றிலை
மண்ணிலவேந்தன்பழம் – எலுமிச்சம்பழம்
மண்ணிலவேந்தன்மரம் – அரசமரம்
மண்ணுருவித் தயிலம் – குழித்தைலம்
மண்ணைகட்டிச்செடி – அதிங்குச்செடி
மண்ணைப்பூடு – வெங்காயப்பூடு
மண்ணையரிசி – வாலுளுவையரிசி
மண்ணோகதப்பூடு – ஒருதலைவெள்ளைப்பூடு
மண்மலிக்கொழுந்து – மருக்கொழுந்துச்செடி
மதகசாம்பிராணி – பரங்கிச்சாம்பிராணி
மதகரித் திப்பிலி – யானைத்திப்பிலி




