HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4996 - 5000 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4996 – 5000 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4996 – 5000 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4996. ஆச்சப்பா கைலாயமேரு கண்டேன்
அங்ஙனவே மகிமையெல்லாம் கூறினேன்யான்
வீச்சுடனே குளிகையது
பூண்டுகொண்டு வீரமுடன் மேருகிரி தன்னைநீக்கி
பாச்சலுடன் சீனமெனும்
பதியிற்சென்று பண்பான மாண்பர்களுக்குகந்துயானும்
ஆச்சரியமானதொரு
மகிமையெல்லாம் அன்புடனே யானுரைத்தேன் சீனத்தார்க்கே
விளக்கவுரை :
4997. சீனமாம் பதினென்பேர் சித்துதாமும் சிறப்பான சாத்திரங்கள் கோடியுண்டு
மானமுடன் சித்தாதி
சித்தர்தாமும் மயக்கமுடன் வெகுநூல்கள் பாடினார்கள்
ஈனமது வாராது எந்தன்நூலு
எழிலான குருநூல்தான் சத்தகாண்டம்
வானமது மேருவென்ற கைலைமேரு
வளப்பமெல்லாம் இந்நூலில் பகர்ந்திட்டேனே
விளக்கவுரை :

[ads-post]
4998. பகர்ந்தேனே
காலாங்கிநாதர்தம்மால் பாங்கான சீனபதி யான்கடந்து
உகர்ந்ததொரு தேசாதிதேசமெல்லாம்
வுத்தமனே குளிகையது பூண்டுகொண்டு
அமர்ந்துமே யட்டதிசை
யானுங்கண்டு வன்பான கைலாச மேரிற்சென்றேன்
சுமர்ந்திட்ட ஆதிசேடன்
தன்னைத்தானும் துப்புரவாய்க் கண்டதில்லை வுண்மைதானே
விளக்கவுரை :
4999. தானான சாத்திரத்தின்
பெருநூலப்பா மேன்மையுள்ள குருநூலாம் சத்தகாண்டம்
கோனான யெனதையர்
காலாங்கிநாதர் கொற்றவனார் குருபாத கடாட்சத்தாலும்
தேனான தென்பொதிகை
தன்னில்வாழும் தேஜொளிவின் அகத்தியனார் கிருபையாலும்
மானான சீனபதி சமாதிசென்ற
மகத்தான கமலமுனி கடாட்சங்காணே
விளக்கவுரை :
5000. காணவே சத்தகாண்ட
மேழிற்குள்ளே கருவிகரணாம் பொருளாதியந்தம்
தோணவே துறைமுகமும்
யானுங்கண்டு துப்புரவாய்ப் பாடிவைத்தேன் குருநூல்தானும்
வேணதொரு பொருளெல்லாம்
இதிலடக்கம் விரும்பியே யானுரைத்த பெருநூல்தானும்
ஆணவங்கள் தானொடுங்கி
யைந்தாங்காண்டம் அன்புடனே பாடிவைத்தேன் முற்றதாமே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments