HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4991 - 4995 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4991 – 4995 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4991 – 4995 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4991. இல்லையே
வாண்பெண்ணாலிரண்டுங்கண்டார் எழிலான சாத்திரங்கள் கற்றுகண்டார்
தொல்லையெனும் பிறவியது
கண்டதில்லை தோறாமல் சாத்திரத்தை வுளறினார்கள்
கொல்லனது வீதிதனில்
வூசிவிற்ற கூரான கதைபோல யென்முன்னாக
எல்லையுள்ள சித்தர்முனி
ரிஷிகளெல்லாம் யெழிலாகப் பாடிவைத்தார் நூல்கள்தாமே
விளக்கவுரை :
4992. நூலான நூல்களெல்லாம்
அதிதஞ்சொன்னார் நுணுக்கமுடன் யாதியந்த வஸ்துயில்லை
பாலான நூல்போலே பலரும்பாடி
பாரினிலே யொளித்துவைத்தார் முனிவர்சித்தர்
காலாண நூலதுதான்
இருபத்திரண்டு கணக்குடனே பாடிவைத்தார் லட்சமாக  
மாலான சாத்திரத்தில்
ஆதியந்தம் மகதேவர் சங்கையதை சொல்வார்தானே
விளக்கவுரை :

[ads-post]
4993. சொல்லாத சாத்திரங்கள்
ஏதுக்கல்லோ தொல்லுலகில் பலநூலுங் கற்றுமென்ன
புல்லர்களாய் வெகுமாண்பர்
பலர்கூடி புகட்டினார் சித்தர்முனி சாத்திரத்தை
வெல்லவே கடவுளது இருக்கும்
ஸ்தானம் வேதாந்தத் தாயாரும் கூறவில்லை
நல்லதொரு சித்துமுனி
சாத்திரங்கள் நலமான நூல்களெல்லாம் பாழாய்ப்போச்சே
விளக்கவுரை :
4994. போச்சென்று விடுகாமல்
புண்ணியர்கள் புகட்டினார் வையகத்து மாண்பர்க்கெல்லாம்
மூச்சடங்கிப் போனதொரு
சித்துதாமும் முனையான தெய்வமது வென்றொன்றுண்டு
பாச்சலுடன் பலபேருமறியவல்லோ
பண்பாகப் பொதுப்படவே சொன்னாரங்கே
ஆச்சரியமான பராவஸ்துதன்னை
வன்புடனே கண்டறிந்தோர் இல்லைபாரே
விளக்கவுரை :
4995. பார்க்கையிலே சாத்திரங்கள்
இதிகாசங்கள் பண்புடனே பாடிவைத்தார் முனிவர்தானும்
ஆர்க்கமுடன் யாரேனும்
விள்ளக்கூறி வன்புடனே சாத்திரங்கள் கூறவில்லை
மார்க்கமது தெரியாமல்
வீணின்காதை மயக்கமுடன் பாடிவைத்தார் நூல்கள்தோறும்
சூர்ப்பனகை மாதுவுக்கு
தனங்கள்போல சுருதிபஒருள் ஆகமங்கள் கதைபோலாச்சே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments