HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5006 - 5010 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5006 – 5010 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5006 – 5010 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5006. தாரிணியில் நூல்கண்டோர்
கர்மிகட்கும் தகமையுள்ள சண்டாளர் பாவிகட்கும்
காரணியாம் நயம்பேசி
கதையுரைக்கும் கடிதான துரோகிகட்கு இந்தநூலை
தூரணியாய் கொடுத்தாக்கால்
பாவமெய்தும் துப்புரவாய்க் கொடுக்காதே புண்ணியவானே
வேரணியாய் தர்மிகட்கும்
புண்ணியர்க்கும் வேணவுபசாரமுடன் கொடுப்பாய்தானே  
விளக்கவுரை :
5007. தானான போகரேழாயிரந்தான்
தாரணியில் கண்டவர்கள் விள்ளார்தாமே
கோனான எனதையர் காலாங்கிநாதர்
குவலயத்தில் கொற்றவர்தன் கடாட்சத்தாலும்
வேனான சத்தகாவியத்தையப்பா
விருப்பமுடன் பாடிவைத்தேன் மைந்தாகேளு
தேனான இந்நூல்தான்
சொர்ணநூலாம் தெளிவாகப் பாடிவைத்தேன் புவியுளோர்க்கே
விளக்கவுரை :

[ads-post]
5008. புவியான இன்னமொரு
மார்க்கம்பாரு புகழான தந்திரமாஞ் ஜாலவித்தை
கவியான சித்தர்முனி
ரிஷிகள்யாரும் கழறவில்லை யெவ்வித நூலிலப்பா
பவியான பணிதிகளை
கொள்ளைகொண்டோர் பாருலகில் காண்பதற்கு வரிதேயாகும்
குவிதமுடன் ஜாலமாந்
தந்திரவித்தை கூறுவேன் மாணாக்கள் பிழைக்கத்தானே
விளக்கவுரை :
5009. தானான கொள்ளைகொண்டோர் மாண்பர்தம்மை தாரிணியில் பிடிப்பதற்கு வுபாயதந்திரம்
மானான மச்சென்ற மாளிதன்னில்
மகத்தான காகமொன்று பதிதானப்பா
பானான மேடையது வொன்றுசெய்து
பாங்கான மேடையின்மேல் கலசம்வைத்து
கோனான குருதனையே மனதிலுன்னி
கொற்றவனே கலசமதில் தேங்காய்வையே
விளக்கவுரை :
5010. வைத்துமே தேங்காய்மேல்
காயந்தன்னை வளமாகத்தான்பூசி மைந்தாநீயும்
பையவே சந்தேகப்பட்டபேரை
பாங்குடனே கும்பலாய்க் கூட்டிக்கொண்டு
மெய்யாக நீங்களெல்லாம்
மாளிசென்று மேன்மையுடன் தேங்காயைத் தொட்டுவந்தால்
கைதனையே
சோதிப்பேனென்றுசொல்லி கருத்துடனே வுறுதிமொழி கூறுவாயே  
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments