HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5256 - 5260 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5256 – 5260 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5256 – 5260 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5256. உரைத்திட்ட கதையெல்லாம்
பொய்யேயாகும் வுத்தமனே சாஸ்திரங்கள் அதர்வணந்தான்
கரைத்திட்ட மாகவல்லோ
மாண்பருக்குக் காசினியில் தாமுரைத்தார் சாஸ்திரங்கள்
நிறைத்திட்ட மாகவல்லோ
யானுஞ்சென்று நீடாழி யுலகுபதி சுத்திவந்தேன் 
வரைக்கமலம் வீற்றிருக்கும்
தாயார்பாதம் வளமையுடன் எந்நாளும் பதங்கண்டேனே
விளக்கவுரை :
5257. பதமான பதமதுவும் சாஸ்திரங்கள் பாங்குடனே மேதினியில் கண்டேன்யானும்
மிதமுடனே தர்க்கங்கள்
யாகமங்கள் மேதினியில் வெகுபேர்கள் சொல்வாரப்பா
நிதமுடனே சாஸ்திரத்தின்
தொகுப்பையெல்லாம் நீதியுடன் மெய்போலே பேசுவார்பார்
சதகோடி சாஸ்திரங்கள்
கூறிட்டாலும் சட்டமுடன் சீனபதிக்கீடாகாரே
விளக்கவுரை :

[ads-post]
5258. இணையான தென்காசி பதியிலப்பா
யெழிலான தேசமது வனேகமுண்டு
சணமதிலே குளிகையது
பூண்டுகொண்டு தாரிணியில் சதகோடி தூரமட்டும்
கணமதுவும் நில்லாமல்
அடியேன்தானும் காசிபதி மாண்பரெல்லாங் கண்டுவந்தேன்
பிணமதுவும் மடிந்தாக்கால்
சாஸ்திரங்கள் பேரான சாங்கியங்கள் மெத்தவுண்டே
விளக்கவுரை :
5259. உண்டான சமுசாரி கோடிமாண்பர்
வுத்தமர்கள் வேதாந்தங் கடந்தஞானி
செண்டான முறைமைகெட்டு
மையல்கொண்டு ஜெகந்தனிலே மடிந்தவர்கள் கோடாகோடி
அண்டமுடன் ஆகாயந்தன்னளவாய்
அகிலமெல்லாங் கொடிகட்டி வாழ்ந்தார்கோடி
புண்டரீக கிருஷ்ணாவ
தாரனைப்போல் புகழான கீர்த்தியுடன் மடிந்தோர்தாமே
விளக்கவுரை :
5260. மடிந்ததொர் மாணாக்கள்
மானிலத்தில் மகதேவர் பாதமது வடைந்தோர்கோடி
கடினமுடன் வையகத்தில்
வாழ்வுபெற்று காசினியில் சாஸ்திரங்கள் மிகவுங்கற்று
அடியளவு வேதமதல் ஆகமங்கள்
அறுபத்து நாலுகலை சாத்திரங்கள்  
முடியோடு முனிவர்பதந்
தாள்பணிந்து மூதுலகில் கற்றென்ன ஒன்றுங்காணே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments