HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5261 - 5265 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5261 – 5265 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5261 – 5265 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5261. காணவென்றால் மடிந்தவர்க்கு
சாத்திரங்கள் கைலாயஞ்சென்றவர்க்குப் பார்க்கலாமோ
தோணவே வுடல்பொருள்கள்
ஆவியெல்லாம் தோற்றாமல் மண்ணோடே மண்ணாய்ப்
போச்சு
வேணதொரு சாத்திரங்கள்
பார்த்தாலென்ன பார்த்தாலும் வையகத்தி லிருப்பாருண்டோ
பூணவே யாகாத நாளில்மாண்டோர்
புகழான வாத்துமமும் இருந்ததுண்டோ
விளக்கவுரை :
5262. இருந்துமே வையகத்தில்
மாளிவிட்டு யெழிலான கிரகமது போவதுண்டோ
திருந்தவே வருடமது
ஆறுதிங்கள் திறமான மாளிதனிலிருந்துகொண்டு
பொருந்தவே பெற்றோர்கள்
குடும்பத்தோரை பொங்கமுடன் வம்புகளுங் கூர்வதுண்டோ
வருந்தியே மாண்டதொரு
கிரகந்தன்னை வளமுடனே தானடைப்பார் பாருபாரே
விளக்கவுரை :

[ads-post]
5263. பாரப்பா நலமான
நாளில்மாண்டோர் பாருலகில் கிரகத்தைவிட்டுமல்லோ  
நேரப்பா சமுதாயங்
கைலாயத்தில் நேர்மையுடன் அடைக்கலமாய் சென்றதென்றும்
சீரப்பா வாத்துமமுங்
கைலாயத்தில் சிறப்புடனே சென்றதென்பார் மாண்பரெல்லாம்
ஆரப்பா கண்டவர்கள்
வையகத்தில் ஆருமில்லை வுண்மையிது பாருபாரே
விளக்கவுரை :
5264. பாரேதான் தேகமது
மண்ணாய்ப்போச்சு பாருலகில் ஆத்துமமும் காணார்மாண்பர்
சீரேதான் ஒடுக்கநிலை
யாருங்காணார் சிறப்பான பிரபஞ்ச வாழ்க்கனைத்தும்
வேரேதான் மறுபிறப்புங்
கண்டதுண்டோ வெட்டவெளி யாகாயமொன்றுங் காணோம்
தீரேதான் சென்றநிலை
காணாமற்றான் திகைத்துமே மாண்பரெல்லாம் திகைப்பார்தானே
விளக்கவுரை :
5265. தானான காலாங்கி எந்தநாதர் தகமையுள்ள வாக்கதுவும் பொய்யெண்ணாது
கோனான யென்குருவாம்
சற்புருஷன் வாக்கு குவலயத்தில் பொய்யாது மெய்யேயாகும்
மானான மகதேவர்படி நிதானம்
மார்க்கமுடன் வயததுவுங் கூறியல்லோ
தேனான தேவரது பாதங்காண
தெளிவான கட்டளைகளுண்டுபாரே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments