HomeUncategorizedThirukural 392 of 1330 - திருக்குறள் 392 of 1330

Thirukural 392 of 1330 – திருக்குறள் 392 of 1330

Thirukural
392 of 1330 –
திருக்குறள் 392 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : கல்வி.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
Translation:
The
twain that lore of numbers and of letters give
Are
eyes, the wise declare, to all on earth that live.
Explanation:
Letters
and numbers are the two eyes of man.
கலைஞர் உரை:
எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.

[ads-post]


மு. உரை:
எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை:
வாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று அறிந்தவர் கூறுவர்.
மணக்குடவர் உரை:
எண்ணென்று சொல்லப்படுவனவும் மற்றை
எழுத்தென்று சொல்லப்படுவனவுமாகிய இவ்விரண்டு பொருளையும் உலகின்கண்
வாழுமுயிர்களுக்குக் கண்ணென்று சொல்லுவர் அறிவோர்.
பரிமேலழகர் உரை:
எண் என்ப ஏனை எழுத்து என்ப
இவ்விரண்டும் – அறியாதார் எண் என்று சொல்லுவனவும் மற்றை எழுத்து என்று
சொல்லுவனவும் ஆகிய கலைகள் இரண்டினையும்
, வாழும் உயிர்க்குக் கண் என்ப – அறிந்தார் சிறப்புடை
உயிர்கட்குக் கண் என்று சொல்லுவர். (எண் என்பது கணிதம். அது கருவியும் செய்கையும்
என இருவகைப்படும். அவை ஏரம்பம் முதலிய நூல்களுள் காண்க. எழுத்து எனவே
, அதனோடு
ஒற்றுமையுடைய சொல்லும் அடங்கிற்று. இவ்விருதிறமும்
,அறமுதற்பொருள்களைக் காண்டற்குக் கருவியாகலின், கண்
எனப்பட்டன.அவை கருவியாதல்
ஆதி
முதலொழிய அல்லாதன எண்ணி. நீதி வழுவா நிலைமையவால் – மாதே
, அறமார் பொருள்
இன்பம் வீடுஎன்று இவற்றின்
,
திறமாமோ எண்ணிறந்தால் செப்பு‘. ‘எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான், மொழித்திறத்தின்
முட்டறுப்பான் ஆகும்
, மொழித்திறத்தின், முட்டறுத்த
நல்லோன் முதல் நூல் பொருள் உணர்ந்து
, கட்டறுத்து வீடு பெறும்‘. இவற்றான் அறிக. என்பஎன்பவற்றுள்
முன்னைய இரண்டும் அஃறிணைப் பன்மைப் பெயர். பின்னது உயர்திணைப் பன்மை வினை.
அறியாதார்
, அறிந்தார்
என்பன வருவிக்கப்பட்டன. சிறப்புடைய உயிர் என்றது மக்கள் உயிருள்ளும் உணர்வு மிகுதி
உடையதனை. இதனால் கற்கப்படும் நூல்கட்குக் கருவியாவனவும் அவற்றது இன்றியமையாமையும்
கூறப்பட்டன.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments