HomeUncategorizedThirukural 390 of 1330 - திருக்குறள் 390 of 1330

Thirukural 390 of 1330 – திருக்குறள் 390 of 1330

Thirukural
390 of 1330 –
திருக்குறள் 390 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : இறைமாட்சி.
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.
Translation:
Gifts,
grace, right sceptre, care of people’s weal;
These
four a light of dreaded kings reveal.
Explanation:
He
is the light of kings who has there four things, beneficence, benevolence,
rectitude, and care for his people.
கலைஞர் உரை:
நல்வாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும்.

[ads-post]

மு. உரை:
கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்.
சாலமன் பாப்பையா உரை:
தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடுப்பது, எதிர் கட்சியினரிடமும் இனிதாய்ப்போசுவது, நீதி விளங்கும் ஆட்சி செய்வது, மக்களைப் பாதுகாப்பது இவை நான்கையும் உடையதே அரசுகளுக்கு விளக்குப் போன்றது.
மணக்குடவர் உரை:
கொடுத்தலும், தலையளி செய்தலும், செங்கோன்மையும்
குடிகளைப் பாதுகாத்தலு மென்று சொல்லப்படுகின்ற இந்நான்கினையு முடையவன்
வேந்தர்க்கெல்லாம் விளக்காம். கொடுத்தல்- தளர்ந்த குடிக்கு விதை ஏர் முதலியன
கொடுத்தல்: அளித்தல்- அவரிடத்துக் கொள்ளுங் கடமையைத் தளர்ச்சி பார்த்து விட்டு
வைத்துப் பின்பு கோடல்: செங்கோன்மை- கொள்ளும் முறையைக் குறையக் கொள்ளாமை:
குடியோம்பல்- தளர்ந்த குடிக்கு இறை கழித்தல். இது குடிக்கு அரசன் செய்யுந் திறங்
கூறிற்று.
பரிமேலழகர் உரை:
கொடை – வேண்டுவார்க்கு வேண்டுவன
கொடுத்தலும்
, அளி-
யாவர்க்கும் தலையளி செய்தலும்
, செங்கோல் – முறை செய்தலும், குடி ஓம்பல் – தளர்ந்த குடிகளைப் பேணலும்
ஆகிய
, நான்கும்
உடையான் -இந்நான்கு செயலையும் உடையான்
, வேந்தர்க்கு ஒளியாம் – வேந்தர்க்கு எல்லாம் விளக்கு
ஆம். (தலையளி – முகம் மலர்ந்து இனிய கூறல்
, செவ்விய கோல்போறலின், ‘செங்கோல்எனப்பட்டது. குடி ஓம்பல்எனஎடுத்துக்
கூறியமையால்
, தளர்ச்சி
பெற்றாம். அஃதாவது
,ஆறில்
ஒன்றாய பொருள் தன்னையும் வறுமை நீங்கியவழிக் கொள்ளல்வேண்டின்
, அவ்வாறு கோடலும், இழத்தல்
வேண்டின்இழத்தலும் ஆம். சாதி முழுதும் விளக்கலின்
, ‘விளக்குஎன்றார். ஒளி – ஆகுபெயர். இவை ஐந்து
பாட்டானும் மாட்சியும்பயனும் உடன் கூறப்பட்டன.) 
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments