HomeUncategorizedThirukural 412 of 1330 - திருக்குறள் 412 of 1330

Thirukural 412 of 1330 – திருக்குறள் 412 of 1330

Thirukural
412 of 1330 –
திருக்குறள் 412 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : கேள்வி.
செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
Translation:
When
’tis no longer time the listening ear to feed
With
trifling dole of food supply the body’s need.
Explanation:
When
there is no food for the ear, give a little also to the stomach.
கலைஞர் உரை:
செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்.

[ads-post]

மு. உரை:
செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
செவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.
மணக்குடவர் உரை:
செவிக்கு உணவாகிய கேள்வி
யில்லாதபோது வயிற்றுக்கும் சிறிது உணவு கொடுக்கத் தகும். பெருக உண்ணின் கேள்வியை
விரும்பாது காமநுகர்ச்சியை விரும்புமாதலான்
, சிறிது என்றார். இஃது எல்லாக்காலமும் கேட்க வேண்டு
மென்றது.
பரிமேலழகர் உரை:
செவிக்கு உணவு இல்லாத போழ்து –
செவிக்கு உணவாகிய கேள்வி இல்லாத பொழுது
, வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும் – வயிற்றுக்கும்
சிறிது உணவு இடப்படும். (சுவை மிகுதியும் பிற்பயத்தலும் உடைய கேள்வி உள்ளபொழுது
வெறுக்கப்படுதலான்
இல்லாத
போழ்து
என்றும், பெரிதாயவழித்தேடல்
துன்பமேயன்றி நோயும் காமமும் பெருகுதலான் சிறிது என்றும் அதுதானும் பின்இருந்து
கேட்டற்பொருட்டாகலான்
ஈயப்படும்என்றும்
கூறினார். ஈதல்
, வயிற்றது
இழிவு தோன்ற நின்றது. இவை இரண்டு பாட்டானும் கேள்வியதுசிறப்புக் கூறப்பட்டது.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments