HomeUncategorizedThirukural 660 of 1330 - திருக்குறள் 660 of 1330

Thirukural 660 of 1330 – திருக்குறள் 660 of 1330

Thirukural
660 of 1330 –
திருக்குறள் 660 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைத்தூய்மை.
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.
Translation:
In pot of clay unburnt he water pours and
would retain,
Who seeks by wrong the realm in wealth and
safety to maintain.

Explanation:
(For a minister) to protect (his king) with
wealth obtained by foul means is like preserving a vessel of wet clay by
filling it with water.
கலைஞர் உரை:
தவறான வழிகளில் பொருளைச் சேர்த்து அதைக் காப்பாற்ற நினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான்.

[ads-post]
மு. உரை:
வஞ்சனையான வழியால் பொருளைச்சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்தில் நீரை விட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
தீய செயல்களால் பொருளைத் திரட்டி, அதைக் காப்பது, சுடாத பச்சைமண் பானையில் நீரை ஊற்றி அதைச் சேமிப்பது போலாம்.
மணக்குடவர் உரை:
வஞ்சத்தாலே பொருள்தேடி
மகிழ்ந்திருத்தல்
, பசுமட்கலத்திலே
நீரை முகந்து வைத்த தன்மைத்து
. இது தானும் பொருளுங் கூடிக் கெடு மென்றது.
பரிமேலழகர் உரை:
சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல்அமைச்சன் தீய
வினைகளாற் பொருள் படைத்து
,
அதனால் அரசனுக்கு ஏமஞ்செய்தல்; பசுமட்கலத்துள் நீர் பெய்து இரீஇயற்றுபசிய
மட்கலத்துள்ளே நீரைப் பெய்து அதற்கு ஏமஞ்செய்ததனோடு ஒக்கும்
. (முன் ஆக்கம் பயப்பன
போல் தோன்றிப் பின் அழிவே பயத்தலால்
, அவைசலம்
எனப்பட்டன. ‘ஏமமார்த்தல்என்பதுஏமார்த்தல்என்றாயிற்று, ஏமத்தை அடையப்
பண்ணுதல் என்றவாறு
, இருத்துதல்நெடுங்காலம்
இருப்பச் செய்தல்
. அரசனும்
பொருளும் சேரப் போம் என்பதாம்
. பிறரெல்லாம், ‘ஏமார்த்தல் என்று பாடமோதி, அதற்கு மகிழ்தல் என்றும், ‘இரீஇயற்றுஎன்பதற்கு
வைத்தாற்போலும் என்றும் உரைத்தார்
, அவர் அவை தன்வினையும் பிறிதின் வினையுமாய்
உவமையிலக்கணத்தோடு மாறுகோடல் நோக்கிற்றிலர்
. இவை நான்கு பாட்டானும் அதற்குக் காரணம் கூறப்பட்டது.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments