HomeUncategorizedThirukural 661 of 1330 - திருக்குறள் 661 of 1330

Thirukural 661 of 1330 – திருக்குறள் 661 of 1330

Thirukural
661 of 1330 –
திருக்குறள் 661 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைத்திட்பம்.
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
Translation:
What men call ‘power in action’ know for
‘power of mind’
Externe to man all other aids you find.
Explanation:
Firmness in action is (simply) one’s
firmness of mind; all other (abilities) are not of this nature.
கலைஞர் உரை:
மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது.

[ads-post]
மு. உரை:
ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனதின் திட்பமே (உறுதியே) ஆகும், மற்றவை எல்லாம் வேறானவை.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலை இடையில் விடாது செய்து முடிப்பதற்கான செயல் உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே. மற்றவை உறுதி எனப்படமாட்டா.
மணக்குடவர் உரை:
வினையினிடத்துத் திண்மை யென்று
சொல்லப்படுவது ஒருவன் மனத்து உண்டான திண்மை
; அதனையொழிய மற்றவையெல்லாம் திண்மையென்று சொல்லப்படா. மற்றவையென்றது
கருவியும் உபாயமும்
.
பரிமேலழகர் உரை:
வினைத் திட்பம் என்பது ஒருவன்
மனத்திட்பம்
வினைசெய்தற்கண்
திண்மை என்று சொல்லப்படுவது அதனை முடித்தற்குரியானொருவன் மனத்தினது திண்மை
; மற்றைய எல்லாம்
பிற
அஃது
ஒழிந்தன எல்லாம் அதற்குத் திண்மை என்று சொல்லப்படா
. (ஒழிந்தனவாவன: படை, அரண், நட்பு
முதலியவற்றின் திண்மைகள்
.
அவையும் அதற்கு வேண்டுவனவாய் இனமாகலின், ‘மற்றையஎன்றும், வேண்டினும் அஃது இல்வழிப் பயனிலவாகலின்பிறஎன்றும் கூறினார். இதனால் வினைத்
திட்பமாவது இன்னது என்பது கூறப்பட்டது
.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments