HomeUncategorizedThirukural 662 of 1330 - திருக்குறள் 662 of 1330

Thirukural 662 of 1330 – திருக்குறள் 662 of 1330

Thirukural
662 of 1330 –
திருக்குறள் 662 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைத்திட்பம்.
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
Translation:
‘Each hindrance shun’, ‘unyielding onward
press, If obstacle be there,’
These two define your way, so those that
search out truth declare.
Explanation:
Not to perform a ruinous act, and not to be
discouraged by the ruinous termination of an act, are the two maxims which, the
wise say, from the principles of those who have investigated the subject.
கலைஞர் உரை:
இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து விடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம்.

[ads-post]
மு. உரை:
இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்த பின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம்.
சாலமன் பாப்பையா உரை:
பழுதுபடும் செயல்களைச் செய்யாது இருப்பது, பழுதுபட்டாலும் மனம் தளராமல் இருப்பது இவ்விரண்டும் நீதிநூல் பல ஆய்ந்தவர்களின் கோட்பாடு என்று கூறுவர்.
மணக்குடவர் உரை:
வினைசெய்யுங்கால் உறும் துன்பத்தை
ஓரார் ஆதலும் அவ்விடத்துத் துன்பமுற்றால் தளரார் ஆதலுமாகிய இவ்விரண்டினது நெறியென்று
சொல்லுவார் நீதி நெறியை ஆராய்ந்தவர்
.
பரிமேலழகர் உரை:
ஆய்ந்தவர் கோள்முன் நீதிநூல்
ஆராய்ந்த அமைச்சரது துணிபு
;
ஊறு ஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டன் ஆறு என்பர்பழுதுபடும்
வினைகளைச் செய்யாமையும்
, செய்யும்
வினை தெய்வத்தான் பழுதுபட்ட வழி அதற்குத் தளராமையும் ஆகிய இவ்விரண்டன் வழி என்பர்
நூலோர்
. (தேவர்க்கும்
அசுரர்க்கும் அமைச்சுப் பூண்ட வியாழ
, வெள்ளிகளது துணிபு தொகுத்துப் பின் நீதிநூலுடையார்
கூறியவாறு கூறுகின்றமையின்
,
ஈண்டு வினைத்தூய்மையும் உடன் கூறினார். உறுதலுடையதனை முன்ஊறுஎன்றமையின், ‘உற்றபின்என்றும்,இவ் இரண்டன் கண்ணே பட்டது என்பார்இரண்டன் ஆறுஎன்றும் கூறினார். ‘ஊறு ஒரார்என்று பாடம்
ஓதுவாரும் உளர்
, அஃதுஒல்காமைஎன்னும்
எண்ணோடும்
, ‘இரண்டுஎன்னும்
தொகையோடும் இயையாமை அவர் அறிந்திலர்
.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments