குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : கல்லாமை.
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.
Translation:
Like
those at draughts would play without the chequered square,

Men
void of ample lore would counsels of the learned share.

Explanation:
To
speak in an assembly (of the learned) without fullness of knowledge, is like
playing at chess (on a board) without squares.

கலைஞர் உரை:
நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்.
[ads-post]
மு.வ உரை:
அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டிஆடினார் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற நூல்களைக் கல்லாதவர், கற்றவர் அவையில் பேசுவது, கட்டம் போடாமல் தாயம் உருட்டுவது போலாம்.
மணக்குடவர் உரை:
கொம்மையின்றி வட்டாடினாற் போலும்; நிரம்பிய
நூல்களைக் கற்றலின்றி வார்த்தை சொல்லுதல். அரங்கு- சூது: வட்டாடுதல்- உருண்டை
யுருட்டல்: கோட்டி கொளல்- ‘புல்லா
வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி‘ என்றாற்போல. இது கல்லாதார் வார்த்தை சொல்லின் அது
தப்புமென்றது.

பரிமேலழகர் உரை:
அரங்கு இன்றி வட்டு ஆடியற்று –
அரங்கினை இழையாது வட்டாடினாற்போலும், நிரம்பிய நூல்இன்றிக் கோட்டி கோளல் – தான்
நிரம்புதற்கு ஏதுவாகிய நூல்களைக் கல்லாது ஒருவன் அவையின்கண் ஒன்றனைச் சொல்லுதல்.
(அரங்கு – வகுத்ததானம். வட்டாடல்: உண்டை உருட்டல். இவை ‘கட்டளையன்ன
வட்டரங்கு இழைத்துக் கல்லாச் சிறாஅர் நெல்லிவட்டாடும்‘ (நற்.3) என்பதனான் அறிக.
நிரம்புதல்: அறிய வேண்டுவன எல்லாம் அறிதல். ‘கோட்டி‘ என்பது ஈண்டு ஆகுபெயர். ‘புல்லா எழுத்தின்
பொருளில் வறுங்கோட்டி‘ (நாலடி.155) என்புழிப்போல. சொல்லும்
பொருளும் நெறிப்படா என்பதாம்.)