குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : கல்லாமை.
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.
Translation:
The
blockheads, too, may men of worth appear,
blockheads, too, may men of worth appear,
If
they can keep from speaking where the learned hear!.
they can keep from speaking where the learned hear!.
Explanation:
The
unlearned also are very excellent men, if they know how to keep silence before
the learned.
unlearned also are very excellent men, if they know how to keep silence before
the learned.
கலைஞர் உரை:
கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்.
[ads-post]
மு.வ உரை:
கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால்
ல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.
சாலமன் பாப்பையா உரை:
கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே.
மணக்குடவர் உரை:
கல்லாதவரும் ஓரிடத்து மிகவும்
நல்லவராவர், கற்றவர்
முன்பு உரையாடாதிருக்கக்கூடுமாயின். சொல்லாதொழிய அறிவாரில்லையாவர் என்றவாறாயிற்று.
இது கல்லாதார்க்கு உபாயம் இது என்றது.
நல்லவராவர், கற்றவர்
முன்பு உரையாடாதிருக்கக்கூடுமாயின். சொல்லாதொழிய அறிவாரில்லையாவர் என்றவாறாயிற்று.
இது கல்லாதார்க்கு உபாயம் இது என்றது.
பரிமேலழகர் உரை:
கல்லாதவரும் நனி நல்லர் –
கல்லாதவரும் மிக நல்லராவர்,
கற்றார் முன் சொல்லாது இருக்கப்பெறின் – தாமே தம்மையறிந்து கற்றார் அவையின்கண்
ஒன்றனையும் சொல்லாதிருத்தல் கூடுமாயின். (உம்மை – இழிவுசிறப்பு உம்மை, தம்மைத்தாம்
அறியாமையின் அது கூடாது என்பார், ‘பெறின்‘ என்றும் கூடின் ஆண்டுத்தம்மை வெளிப்படுத்தாமையானும், பின் கல்வியை
விரும்புவராகலானும் ‘நனிநல்லர்‘ என்றும்
கூறினார். இவை மூன்று பாட்டானும் கல்லாதார், அவைக்கண் சொல்லுதற்கு உரியரன்மை கூறப்பட்டது.)