HomeUncategorizedThirukural 193 of 1330 - திருக்குறள் 193 of 1330

Thirukural 193 of 1330 – திருக்குறள் 193 of 1330

Thirukural
193 of 1330 –
திருக்குறள் 193 of 1330

thirukural
குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
பயனில சொல்லாமை.
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
Translation:
Diffusive
speech of useless words proclaims
A
man who never righteous wisdom gains.
Explanation:
That
conversation in which a man utters forth useless things will say of him
“he is without virtue”.
கலைஞர் உரை:
பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.

[ads-post]
மு. உரை:
ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.
மணக்குடவர் உரை:
நயனுடைய னல்லனென்பதனை யறிவிக்கும், பயனில்லாதவற்றைப் பரக்க விட்டுச் சொல்லுஞ் சொற்கள், இது பயனில சொல்வார் இம்மையின்கண் பிறரால் இயம்பப் படாரென்றது.
பரிமேலழகர் உரை:
பயன் இல பாரித்து உரைக்கும் உரைபயன் இலவாகிய பொருள்களை ஒருவன் விரித்து உரைக்கும் உரைதானே, நயன் இலன் என்பது சொல்லும்இவன் நீதி இலன் என்பதனை உரைக்கும். (உரையால் இவன்நயனிலன்என்பது அறியலாம் என்பார், அதனை உரைமேல் ஏற்றி, ‘உரை சொல்லும்என்றார்.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments