HomeUncategorizedThirukural 663 of 1330 - திருக்குறள் 663 of 1330

Thirukural 663 of 1330 – திருக்குறள் 663 of 1330

Thirukural
663 of 1330 –
திருக்குறள் 663 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைத்திட்பம்.
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.
Translation:
Man’s fitting work is known but by success
achieved;
In midst the plan revealed brings ruin
ne’er to be retrieved.
Explanation:
So to perform an act as to publish it
(only) at its termination is (true) manliness; for to announce it beforehand,
will cause irremediable sorrow.
கலைஞர் உரை:
செய்து முடிக்கும் வரையில் ஒரு செயலைப்பற்றி வெளிப்படுத்தாமலிருப்பதே செயலாற்றும் உறுதி எனப்படும். இடையில் வெளியே தெரிந்துவிட்டால் அச்செயலை நிறைவேற்ற முடியாத அளவுக்கு இடையூறு ஏற்படக்கூடும்.

[ads-post]
மு. உரை:
செய்யும் செயலை முடிவில் வெளிப்படும் படியாக செய்யும் தகுதியே ஆண்மையாகும், இடையில் வெளிபட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலை முடிவில் வெளிப்படுத்துவதே ஆளுமை, இடையிலேயே வெளிப்படுத்தினால் அது செயலைச் செய்பவனுக்கு நீங்காத துன்பத்தைத் தரும்.
மணக்குடவர் உரை:
ஒரு வினையைத் தொடங்கினால் முடிவிலே
சென்று மீளல் செய்வது ஆண்மையாவது
; இடையிலே மீள்வானாயின் அது மிகுதியைக் கெடாத நோயைக்
கொடுக்கும்
. சென்று
மீளல் சுழல்தல் ஆயிற்று
. இது
தொடங்கின வினையை முடியச் செய்யவேண்டுமென்றது
.
பரிமேலழகர் உரை:
கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மைசெய்யப்படும்
வினையை முடிவின்கண் புலப்படும் வகை முன்னெல்லாம் மறைத்துச் செய்வதே திட்பமாவது
; இடைக்கொட்கின்
எற்றா விழுமம் தரும்
அங்ஙனமின்றி
இடையே புலப்படுமாயின் அப்புலப்பாடு செய்வானுக்கு நீங்காத இடும்பையைக் கொடுக்கும்
. (மறைத்துச்
செய்வதாவது
: அங்கம்
ஐந்தும் எண்ணியவாறு பிறரறியாமலும்
, தான் அறிந்ததூஉம், தன் இங்கிதம், வடிவு, செயல், சொற்களான் அவன் உய்த்துணராமலும் அடக்கிச் செய்தல். அத்திட்பம் ஆண்
தன்மையான் வருதலின்
ஆண்மைஎனப்பட்டது. எற்றா விழுமமாவன, பகைவர் முன்
அறிந்து அவ்வினையை விலக்குதல்
, செய்வானை விலக்குதல் செய்வர்ஆகலின், அவற்றான் வருவன. விழுமம் : சாதிப்பெயர். இவைஇரண்டு
பாட்டானும் அதனது பகுதி கூறப்பட்டது
.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments