HomeUncategorizedThirukural 674 of 1330 - திருக்குறள் 674 of 1330

Thirukural 674 of 1330 – திருக்குறள் 674 of 1330

Thirukural
674 of 1330 –
திருக்குறள் 674 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைசெயல்வகை.
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.
Translation:
With work or foe, when you neglect some
little thing,
If you reflect, like smouldering fire,
’twill ruin bring.
Explanation:
When duly considered, the incomplete
execution of an undertaking and hostility will grow and destroy one like the
(unextinguished) remnant of a fire.
கலைஞர் உரை:
ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்.

[ads-post]
மு. உரை:
செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை இரண்டிலும் மிச்சம் இருந்தால் அவை தீயின் மிச்சம் போல வளர்ந்து அழிக்கும் (ஆதலால் எதையும் முழுமையாகச் செய்க).
மணக்குடவர் உரை:
வினையும் பகைமையு மென்னும்
இரண்டினது ஒழிபு விசாரிக்குங்காலத்துத் தீயின் ஒழிவுபோலக் கெடுக்கும்
. எச்சம்சேஷம். இது
வினைசெய்யுங்கால் சிறிதொழியச் செய்தோமென்று விடலாகாதென்றது
.
பரிமேலழகர் உரை:
வினை பகை என்ற இரண்டின் எச்சம்செய்யத் தொடங்கிய
வினையும் களையத்தொடங்கிய பகையும் என்று சொல்லப்பட்ட இரண்டனது ஒழிவும்
; நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்

ஆராயுங்கால் தீயினது ஒழிவு போலப்பின் வளர்ந்து கெடுக்கும். (இனி,இக்குறை என்
செய்வது
? என்று
இகழ்ந்தொழியற்க
, முடியச்
செய்க என்பதாம்
, பின்
வளர்தல் ஒப்புமைபற்றிப் பகையெச்சமும் உடன் கூறினார்
. இதனான் வலியான் செய்யுந் திறம்
கூறப்பட்டது
.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments