HomeUncategorizedThirukural 673 of 1330 - திருக்குறள் 673 of 1330

Thirukural 673 of 1330 – திருக்குறள் 673 of 1330

Thirukural
673 of 1330 –
திருக்குறள் 673 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைசெயல்வகை.
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.
Translation:
When way is clear, prompt let your action
be;
When not, watch till some open path you
see.
Explanation:
Whenever it is possible (to overcome your
enemy) the act (of fighting) is certainly good; if not, endeavour to employ
some more successful method.
கலைஞர் உரை:
இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும்.

[ads-post]
மு. உரை:
இயலுமிடத்தில் எல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது, இயலாவில்லையானால் பயன்படும் இடம் நோக்கியாவது செய்ய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யும்போது சாம, தான, பேத, தண்டம் என்னும் எல்லா உபாயங்களிலும் தண்டம் என்னும் உபாயம் கொண்டு செய்வது நல்லது. அது பலன் அளிக்காத போது, பிற மூன்றினுள் ஏற்ற ஒன்று கொண்டு செய்க.
மணக்குடவர் உரை:
இயலும் இடமெல்லாம் வினைசெய்தல்
நன்று
: இயலாத
காலத்து அதனை நினைந்திருந்து இயலும் இடம் பார்த்துச் செய்க
. இது வினைசெய்து
முடிந்ததில்லை யென்று இகழாது பின்பு காலம் பார்த்துச் செய்கவென்றது
.
பரிமேலழகர் உரை:
ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்றுவினை
செய்யுங்கால் இயலுமிடத்தெல்லாம் போராற் செய்தல் நன்று
; ஒல்லாக்கால்
செல்லும் வாய் நோக்கிச் செயல்
அஃது இயலாவிடத்து ஏனை மூன்று உபாயத்துள்ளும் அது முடிவதோர்
உபாயம் நோக்கிச் செய்க
. (இயலுமிடம்: பகையின் தான்
வலியனாகிய காலம்
. அக்காலத்துத்
தண்டமே நன்று என்றார்
, அஞ்சுவது
அதற்கேயாகலின்
. இயலா
இடம்
ஒத்த
காலமும் மெலிய காலமும்
. அவ்விரண்டு
காலத்தும் சாமபேத தானங்களுள் அது முடியும் உபாயத்தாற் செய்க என்றார்
. அவை ஒன்றற்கொன்று
வேறுபாடுடையவேனும் உடம்படுத்தற் பயத்தான் தம்முள் ஒக்கும் ஆகலின்
, இதனான், வலியான், ஒப்பான், மெலியான் என நிலை
மூவகைத்து என்பதூஉம்
, அவற்றுள்
வலியது சிறப்பும் கூறப்பட்டன
.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments