HomeUncategorizedThirukural 197 of 1330 - திருக்குறள் 197 of 1330

Thirukural 197 of 1330 – திருக்குறள் 197 of 1330

Thirukural
197 of 1330 –
திருக்குறள் 197 of 1330

thirukural
குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
பயனில சொல்லாமை.
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.
Translation:
Let
those who list speak things that no delight afford,
‘Tis
good for men of worth to speak no idle word.
Explanation:
Let
the wise if they will, speak things without excellence; it will be well for
them not to speak useless things.
கலைஞர் உரை:
பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது.

[ads-post]
மு. உரை:
அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது.
மணக்குடவர் உரை:
சான்றோர் நயனில்லாதவற்றைச் சொல்லினுஞ் சொல்லுக, அமையும்; பயனில்லாதவற்றைச் சொல்லாமை நன்று. இது சான்றோர்க்கு ஆகாதென்றது.
பரிமேலழகர் உரை:
நயன் இல சான்றோர் சொல்லினும் சொல்லுகசான்றோர் நீதியோடு படாத சொற்களைச் சொன்னாராயினும் அஃது அமையும், பயன் இல சொல்லாமை நன்றுஅவர் பயன் இலவற்றைச் சொல்லாமை பெறின், அது நன்று (‘சொல்லினும்எனவே, சொல்லாமை பெறப்பட்டது. நயன் இலவற்றினும் பயன் இல தீய என்பதாம்.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments