HomeUncategorizedThirukural 420 of 1330 - திருக்குறள் 420 of 1330

Thirukural 420 of 1330 – திருக்குறள் 420 of 1330

Thirukural
420 of 1330 –
திருக்குறள் 420 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : கேள்வி.
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.
Translation:
His
mouth can taste, but ear no taste of joy can give!
What
matter if he die, or prosperous live?.
Explanation:
What
does it matter whether those men live or die, who can judge of tastes by the
mouth, and not by the ear ?.
கலைஞர் உரை:
செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்.

[ads-post]

மு. உரை:
செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன.
சாலமன் பாப்பையா உரை:
செவியால் நுகரப்படும் சுவைகளை உணராமல், வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே அறியும் மனிதர் இருந்தால் என்ன? இறந்தால்தான் என்ன?.
மணக்குடவர் உரை:
செவியால் நுகரும் இன்பத்தை யறியாத, வாயால் நுகரும்
இன்பத்தையறியும் மாக்கள் செத்தால் வருந் தீமை யாது
? வாழ்ந்தால் வரும் நன்மை யாது? உலகத்தார்க்கு. இது
கேள்வியில்லாதார் பிறர்க்குப் பயன் படாரென்றது.
பரிமேலழகர் உரை:
செவியின் சுவை உணரா வாய் உணர்வின்
மாக்கள் – செவியான் நுகரப்படுஞ் சுவைகளை உணராத வாய் உணர்வினையுடைய மாந்தர்
, அவியினும்
வாழினும் என் – சாவினும் வாழினும் உலகிற்கு வருவது என்ன
? (செவியால்
நுகரப்படும் சுவைகளாவன: சொற்சுவையும் பொருட்சுவையும். அவற்றுள் சொற்சுவை குணம்
, அலங்காரம் என
இருவகைத்து: பொருட்சுவை காமம்
, நகை,
கருணை, வீரம், உருத்திரம், அச்சம், இழிப்பு, வியப்பு, சாந்தம் என
ஒன்பது வகைத்து. அவையெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும்.
வாயுணர்வு‘ ‘என்பது
இடைப்பதங்கள் தொக்கு நின்ற மூன்றாம் வேற்றுமைத் தொகை
; அது வாயான்
நுகரப்படும் சுவைகளை உணரும் உணர்வு என விரியும். அவை கைப்பு. கார்ப்பு
, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, தித்திப்பு என
ஆறு ஆம். செத்தால் இழப்பதும் வாழ்ந்தால் பெறுவதும்
இன்மையின், இரண்டும் ஒக்கும் என்பதாம். வாயுணர்வின்
என்று பாடம் ஓதுவாரும் உளர். இவை மூன்று பாட்டானும்கேளாதவழிப்படும் குற்றம்
கூறப்பட்டது.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments