HomeUncategorizedThirukural 408 of 1330 - திருக்குறள் 408 of 1330

Thirukural 408 of 1330 – திருக்குறள் 408 of 1330

Thirukural
408 of 1330 –
திருக்குறள் 408 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : கல்லாமை.
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.
Translation:
To
men unlearned, from fortune’s favour greater-evil springs
Than
poverty to men of goodly wisdom brings.
Explanation:
Wealth,
gained by the unlearned, will give more sorrow than the poverty which may come
upon the learned.
கலைஞர் உரை:
முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்.

[ads-post]

மு. உரை:
கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள
வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது.
மணக்குடவர் உரை:
நல்லார்மாட்டு உண்டாகிய வறுமைபோலப்
பிறர்க்கு இன்னாமையைச் செய்யும்
; கல்லாதார்மாட்டு உண்டாகிய செல்வம். இது செல்வமுண்டாயின், பிறரைத்
துன்பமுறுவிப்பரென்றது.
பரிமேலழகர் உரை:
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாது
– கற்றார்மாட்டு நின்ற வறுமையினும் இன்னாது
, கல்லார்கண் பட்ட திரு – கல்லாதார் மாட்டு நின்ற செல்வம்.
(இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தம்தம் நிலையின் அன்றிமாறி நிற்றலால்
தாம் இடுக்கண்படுதலும் உலகிற்குத் துன்பஞ்செய்தலும் இரண்டற்கும் ஒக்குமாயினும்
, திரு கல்லாரைக்
கெடுக்க
, வறுமை
நல்லாரைக் கெடாது நிற்றலான்
,
வறுமையினும் திரு இன்னாதுஎன்றார். இதனால் அவர் திருவின் குற்றம் கூறப்பட்டது.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments