HomeUncategorizedThirukural 407 of 1330 - திருக்குறள் 407 of 1330

Thirukural 407 of 1330 – திருக்குறள் 407 of 1330

Thirukural
407 of 1330 –
திருக்குறள் 407 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : கல்லாமை.
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.
Translation:
Who
lack the power of subtle, large, and penetrating sense,
Like
puppet, decked with ornaments of clay, their beauty’s vain pretence.
Explanation:
The
beauty and goodness of one who is destitute of knowledge by the study of great
and exquisite works, is like (the beauty and goodness) of a painted earthen
doll.
கலைஞர் உரை:
அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.

[ads-post]

மு. உரை:
நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
நுண்ணிய, சிறந்த பல நூல்களிலும் நுழைந்த அறிவு இல்லாதவனின் உடல் வளர்ச்சியும் அழகும், மண்ணால் சிறப்பாகச் செய்யப்பட்ட பொம்மையின் அழகு போன்றதாகும்.
மணக்குடவர் உரை:
நுண்ணிதாகிய மாட்சிமைப்பட்ட
ஆராய்ச்சியையுடைய கல்வியில்லாதான் அழகு
, மண்ணினாலே நன்றாகச் செய்த பாவையின் அழகினை யொக்கும். இஃது
அழகியராயினும் மதிக்கப்படாரென்றது.
பரிமேலழகர் உரை:
நுண்மாண் நுழை புலம் இல்லான் எழில்
நலம் – நுண்ணியதாய்
, மாட்சிமைப்பட்டுப்
பல நூல்களினும் சென்ற அறிவு இல்லாதவனுடைய எழுச்சியும் அழகும்
, மண், மாண் புனை பாவை
அற்று – சுதையான் மாட்சிமைப்படப் புனைந்தபாவையுடைய எழுச்சியும் அழகும் போலும்.
(அறிவிற்கு மாட்சிமையாவது
,
பொருள்களைக் கடிதிற்காண்டலும்மறவாமையும் முதலாயின. பாவைஆகுபெயர். உருவின்மிக்கதோர்
உடம்பது பெறுதலும் அரிது

(
சீவக. முத்தி. 154)ஆகலான், எழில் நலங்களும்
ஒரு பயனே எனினும்
, நூலறிவுஇல்வழிச்
சிறப்பில என்பதாம். இதனால் அவர்வடிவழகால் பயன் இன்மை கூறப்பட்டது.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments