HomeUncategorizedThirukural 383 of 1330 - திருக்குறள் 383 of 1330

Thirukural 383 of 1330 – திருக்குறள் 383 of 1330

Thirukural
383 of 1330 –
திருக்குறள் 383 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : இறைமாட்சி.
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.
Translation:
A
sleepless promptitude, knowledge, decision strong:
These
three for aye to rulers of the land belong.
Explanation:
These
three things, viz., vigilance, learning, and bravery, should never be wanting
in the ruler of a country.
கலைஞர் உரை:
காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்.

[ads-post]

மு. உரை:
காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த
மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.
சாலமன் பாப்பையா உரை:
செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது.
மணக்குடவர் உரை:
மடியின்மையும் கல்வியுடைமையும் ஒரு
பொருளை ஆராய்ந்து துணிதலுடைமையும் என்று சொல்லப்பட்ட இம்மூன்றும் பூமியை
யாள்பவனுக்கு நீங்காமல் வேண்டும்.
பரிமேலழகர் உரை:
நிலன் ஆள்பவற்கு – நிலத்தினை ஆளும்
திருவுடையாற்கு
; தூங்காமை
கல்வி துணிவு உடைமை இம்மூன்றும் நீங்கா – அக்காரியங்களில் விரைவுடைமையும்
, அவை அறிதற்கு
ஏற்ற கல்வியுடமையும்
, ஆண்மை
உடைமையும் ஆகிய இம்மூன்று குணமும் ஒருகாலும் நீங்கா. (கல்வியது கூறுபாடு முன்னர்க்
கூறப்படும். ஆண்மையாவது
, ஒன்றனையும்
பாராது கடிதில் செய்வது ஆகலின்
,அஃது ஈண்டு உபசார வழக்கால் துணிவுஎனப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய எச்ச
உம்மை. இவற்றுள் கல்வி ஆறு அங்கத்திற்கும் உரித்து. ஏனைய வினைக்கு உரிய.
நீங்காஎன்பதற்குமேல்
எஞ்சாமைக்கு உரைத்தாங்கு உரைக்க)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments