HomeUncategorizedThirukural 381 of 1330 - திருக்குறள் 381 of 1330

Thirukural 381 of 1330 – திருக்குறள் 381 of 1330

Thirukural
381 of 1330 –
திருக்குறள் 381 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : இறைமாட்சி.
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.
Translation:
An army, people, wealth, a minister,
friends, fort: six things-
Who owns them all, a lion lives amid the
kings.
Explanation:
He who possesses these six things, an army,
a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kings.
கலைஞர் உரை:
ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே ஆண் சிங்கம் போன்ற அரசாகும்.

[ads-post]
மு. உரை:
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.
சாலமன் பாப்பையா உரை:
வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடையதே அரசுகளில் சிங்கம் போன்றது.
மணக்குடவர் உரை:
படையும் குடியும் கூழும் அமைச்சும்
நட்பும் அரணுமென்னும் ஆறுபொருளினையும் உடையவன் அரசருள் ஏறுபோல்வன். ஈண்டுக்
குடியுள் நாடு அடங்கிற்று. இஃது அரசனுக்கு உண்டாக்குவன கூறிற்று.
பரிமேலழகர் உரை:
படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண்
உடையான் – படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணும் என்று சொல்லப்பட்ட
ஆறு அங்கங்களையும் உடையவன்
,
அரசருள் ஏறு = அரசருள் ஏறு போல்வான். (ஈண்டுக் குடிஎன்றது, அதனை உடைய நாட்டினை. கூழ் என்றது, அதற்கு ஏதுவாகிய
பொருளை. அமைச்சு
, நாடு, அரண், பொருள், படை , நட்பு என்பதே
முறையாயினும் ஈண்டுச் செய்யுள் நோக்கிப் பிறழ வைத்தார்.
ஆறும்உடையான்
என்றதனால்
, அவற்றுள்
ஒன்று இல்வழியும் அரசநீதி செல்லாது என்பது பெற்றாம். வடநூலார் இவற்றிற்கு
அங்கம்எனப்பெயர்கொடுத்ததூஉம்
அது நோக்கி.
ஏறுஎன்பது உபசார
வழக்கு.இதனால் அரசற்கு அங்கமாவன இவை என்பதூஉம்
, இவைமுற்றும் உடைமையே அவன் வெற்றிற்கு ஏது
என்பதூஉம்கூறப்பட்டன.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments