HomeUncategorizedThirukural 685 of 1330 - திருக்குறள் 685 of 1330

Thirukural 685 of 1330 – திருக்குறள் 685 of 1330

Thirukural
685 of 1330 –
திருக்குறள் 685 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : தூது.
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.
Translation:
In terms concise, avoiding wrathful speech,
who utters pleasant word,
An envoy he who gains advantage for his
lord.
Explanation:
He is an ambassador who (in the presence of
foreign rulers) speaks briefly, avoids harshness, talks so as to make them
smile, and thus brings good (to his own sovereign).
கலைஞர் உரை:
சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்திகளைத் தொகுத்தும், தேவையற்ற செய்திகளை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும்.

[ads-post]
மு. உரை:
பலவற்றைத் தொகுத்து சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்த அரசிடம் சொல்லவேண்டியவற்றைத் தொகுத்துச் சொல்லியும், வெறுப்பு ஊட்டக் கூடியவற்றை விலக்கியும், இனிய சொற்களால் மனம் மகிழக் கூறியும், தம் சொந்த நாட்டிற்கு நன்மையைத் தேடி தரவேண்டியது தூதரின் பண்பாகும்.
மணக்குடவர் உரை:
சுருங்கச்சொல்லி, விரும்பாத
சொற்களை நீக்கி
, மகிழுமாறு
சொல்லித் தன்னரசனுக்கு நன்மையைத் தருமவன் தூதனாவான்
. இது சொல்லுமாறு கூறிற்று.
பரிமேலழகர் உரை:
தொகச் சொல்லிவேற்றரசர்க்குப்
பல காரியங்களைச் சொல்லும்வழிக் காரணவகையால் தொகுத்துச் சொல்லியும்
; தூவாத நீக்கி
நகச் சொல்லி
இன்னாத
காரியங்களைச் சொல்லும்வழி வெய்ய சொற்களை நீக்கி இனிய சொற்களான் மனமகிழச்
சொல்லியும்
; நன்றி
பயப்பது தூதுஆம்
தன்னரசனுக்கு
நன்மையைப் பயப்பவனே தூதனாவான்
. (பல காரியங்கட்கு உடம்படாதார் பரம்பரையான் அவற்றிற்குக்
காரணமாயது ஒன்றைச் சொல்ல அதனால் அவை விளையுமாறு உய்த்துணர அருமையானும்
சுருக்கத்தானும் உடம்படுவர்
,
இன்னாதவற்றிற்கு உடம்படாதார் தம் மனம் மகிழச் சொல்ல, அவ்வின்னாமை
காணாது உடம்படுவராதலின்
, அவ்விருவாற்றானும்
தன் காரியம் தவறாமல் முடிக்கவல்லான் என்பதாம்
. எண்ணும்மைகள், விகாரத்தால் தொக்கன.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments