சீவக சிந்தாமணி 2021 – 2025 of 3145 பாடல்கள்
2021. நறவு இரிய நாறு குழலாள் பெரிது நக்குப்
பிறரும் உளரோ பெறுநர் பேணி மொழிக என்னத்
துறை அறிந்து சேர்ந்து தொழுது ஆடுநர் இல் என்றாற்கு
அறிதிர் பிற நீவிர் என ஐயம் இலை என்றான்
விளக்கவுரை :
2022. செத்த மரம் மொய்த்த மழையால் பெயரும் என்பார்
பித்தர் இவர் உற்ற பிணி தீர்த்தும் என எண்ணி
அத்தம் என மிக்க சுடர் அம் கதிர் சுருக்கும்
மொய்த்த மணி மாட மிசை அத்தக அடைந்தாள்
விளக்கவுரை :
[ads-post]
2023. வடிவம் இது மூப்பு அளிது வார் பவள வல்லிக்
கடிகை துவர் வாய் கமலம் கண்ணொடு அடி வண்ணம்
கொடிது பசி கூர்ந்துளது கோல் வளையினீரே
அடிசில் கடிது ஆக்கி இவணே கொணர்மின் என்றாள்
விளக்கவுரை :
2024. நானம் உரைத்து ஆங்கு நறு நீர் அவனை ஆட்டி
மேனி கிளர் வெண் துகிலும் விழுப் பொன் இயல் நூலும்
பால் நலம் கொள் தீம் கிளவி பவித்திரமும் நல்கத்
தான் அமர்ந்து தாங்கி அமை தவிசின் மிசை இருந்தான்
விளக்கவுரை :
2025. திங்கள் நலம் சூழ்ந்த திரு மீன்கள் எனச் செம் பொன்
பொங்கு கதிர் மின்னு புகழ்க் கலங்கள் பல பரப்பி
இங்கு சுவையின் அமுதம் ஏந்த மிகு சான்றோன்
எங்கும் இலை இன்ன சுவை என்று உடன் அயின்றான்
விளக்கவுரை :




